திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் உள்ள 'ஆய்வக மெக்கானிக்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளர், கட்சி பெயரில் சுவரொட்டி ஒட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது. இதன் படி மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மாநில தேர்தல் ஆணைய கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் உள்ளன. இந்த நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகள் செய்து வருகிறது. சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி வருகிற 27-ம் தேதிக்குள் தேர்தல் தொடர்பான அறிவிப்புகள் வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை சிக்கல் இன்றி நடத்துவதற்காக உரிய பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் செயல்பாடுகளை எப்படி கையாள்வது என்று தேர்தல் ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்த நிலையில் வாக்குச்சாவடிகளில் ஓட்டுப்பதிவு நேரடியாக கண்காணிக்கப்பட வேண்டும் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. அதை ஏற்று வாக்குச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதற்கிடையே அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனும் ஆலோசனை நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன் பேரில் சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் கடந்த 19-ம் தேதி நடைபெற்றது.
அப்போது தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒரே கட்டமாக நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளும் வலியுறுத்தின. சில கட்சிகள் ஓட்டுப்பதிவு நேரம் தொடர்பாக கருத்து தெரிவித்தன. சில கட்சிகள் வாக்காளர்களுக்கான கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக கருத்துகளை வெளியிட்டன. கொரோனா காலம் என்பதால் அதற்கேற்ப தேர்தல் ஆணைய அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்று கட்சி பிரதிநிதிகள் வலியுறுத்தினார்கள்.
அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டதன் அடிப்படையில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. விரைவில் அவை வெளியாக இருக்கிறது. இந்தநிலையில் வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம், மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளது.
இந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு:-
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அரசியல் கட்சி பிரதிநிதிகளின் கருத்துக்களை கேட்டதன் அடிப்படையில் கையேடுகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இந்த வேட்பாளர் கையேட்டை மாநில தேர்தல் ஆணையம், மாவட்டங்களுக்கு அனுப்பி உள்ளது. இந்த தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன. அதில் இடம்பெற்றுள்ள விவரங்கள் வருமாறு;-
1) இந்த முறை நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை (டெபாசிட்) இரட்டிப்பாக உயர்த்தப்பட்டுள்ளது.
2) அதன்படி, மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ரூ.4 ஆயிரம், நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2 ஆயிரம், பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 காப்புத்தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் போட்டியிட்டால் மேற்கூறிய தொகையில் பாதி செலுத்தினால் போதும் என்பது குறிப்பிடத்தக்கது.
3) வேட்பாளர் பெயரிலோ, கட்சிகள் பெயரிலோ மற்றும் அது தொடர்பான வாசகங்கள் அச்சிடப்பட்ட எவ்விதமான விளம்பர சுவரொட்டிகளோ, டிஜிட்டல் பேனர்களோ, கட்- அவுட்களோ, சுவரில் எழுதப்பட்டோ மாநிலத்தின் எந்த இடத்திலும் இருக்கக்கூடாது.
4) இந்த முறை ஒலிப்பெருக்கி பயன்படுத்துவது தொடர்பாக கடும் கட்டுப்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் விதித்துள்ளது. வாக்குச்சாவடிகள், வாக்கு எண்ணும் மையங்களில் வேட்பாளர்கள் மற்றும் அவரது முகவர்கள் கைப்பேசி பயன்படுத்த தடை விதிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
-
உக்ரைன் போரால் விரைவில் உணவுப் பஞ்சம் ஏற்படும்: ஐ.நா. பொது செயலாளர் எச்சரிக்கை
19 May 2022உக்ரைன் மீதான ரஷ்யாவின் போரால் உலகில் உணவுப் பஞ்சம் ஏற்படும் என ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
விக்கெட் இழப்பின்றி 210 ரன் ஐ.பி.எல். கிரிக்கெட் வரலாற்றில் கே.எல்.ராகுல் - டி காக் சாதனை
19 May 2022மும்பை:ஐ.பி.எல்.
-
பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த பியூஷ்கோயலிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்
19 May 2022பருத்தி மற்றும் நூல் விலையை கட்டுப்படுத்த ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கக் கோரி ஒன்றிய ஜவுளித் துறை அமைச்சரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் வ
-
உக்ரைனுக்கு போர் விமானங்கள் வாங்கி கொடுத்த பாக். தொழிலதிபர்
19 May 2022பாகிஸ்தானைச் சேர்ந்த தொழிலதிபரான முகமது சஹூர், தனது நண்பர்களின் ஒத்துழைப்புடன் உக்ரைனுக்கு இரண்டு போர் விமானங்களை வாங்கி கொடுத்துள்ளார்.
-
பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு: இலங்கையில் மீண்டும் நெருக்கடி: வாகனங்கள் இன்றி வெறிச்சோடிய சாலைகள்..!
19 May 2022இலங்கையில் மீண்டும் பெட்ரோலுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டு வாகனங்கள் முடங்கியுள்ளதால் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
இலங்கையில் போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சிங்களர்கள் முதன்முறையாக அஞ்சலி
19 May 2022இலங்கை ராணுவத்துடனான போரில் உயிரிழந்த தமிழர்களுக்கு சிங்களர்கள் அஞ்சலி செலுத்திய நிகழ்வு அனைவரையும் வியப்படைய செய்துள்ளது.
-
புதிய இந்திய தொழில்நுட்ப கழகங்களை நடத்த முதல் நாடாக ஜமைக்கா விருப்பம்: ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பேச்சு
19 May 2022வெளிநாட்டில் புதிய இந்திய தொழில்நுட்பக் கழகங்களைத் தொடங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாகவும், அதை நடத்த விருப்பம் தெரிவித்த முதல் நாடு ஜமைக்கா என்றும் குடியரசுத் தலைவர் ராம்
-
வரத்து குறைவு எதிரொலி: கோயம்பேடு மார்க்கெட்டில் சதமடித்த தக்காளி விலை
19 May 2022கோயம்பேடு மார்க்கெட்டுக்கு ஆந்திரா கர்நாடகா மாநிலங்களில் இருந்து தக்காளி விற்பனைக்கு வருகிறது. கடந்த சில நாட்கள் தக்காளி வரத்து குறைந்து உள்ளது.
-
‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டி மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரம்
19 May 2022சென்னை:‘செஸ் ஒலிம்பியாட்’ போட்டிற்கு மாமல்லபுரத்தில் கூடுதல் அரங்கம் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
இலங்கையில் உள்ள இந்தியர்கள் அனைவரும் தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவு..!
19 May 2022இலங்கையில் தங்கி உள்ள இந்தியர்கள் அனைவரும் இந்திய தூதரக இணையதளத்தில் பதிவு செய்ய இந்திய வெளியுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
கல்குவாரியில் விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் பணியிடை நீக்கம்..! நெல்லை மாவட்ட கலெக்டர் விஷ்ணு தகவல்
19 May 2022குவாரி விபத்து தொடர்பாக கனிம வளத்துறை உதவி இயக்குனர் வினோத் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
-
கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் ஜூன் இறுதியில் பள்ளிகளை திறக்க திட்டம்..!
19 May 2022கோடை விடுமுறைக்குப் பின் ஜூன் மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.
-
அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட தொல்பொருள் மாதிரிகளின் கண்காட்சி: முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
19 May 2022தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோயம்புத்தூர், வ.உ.சிதம்பரனார் மைதானத்தில், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட த
-
பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம்: கோவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
19 May 2022பொருளாதார வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றுவோம் என்று கோவையில் நடந்த தொழில் கூட்டமைப்பினருடனான கலந்தாய்வு கூட்டத்தில் முதல்வர் மு.க.
-
நாடாளுமன்ற கூட்டத்தில் பங்கேற்றார் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே
19 May 2022மக்களின் கடும் கோபத்தால் கடற்படை தளத்தில் பதுங்கி இருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே மற்றும் அவரது மகன் நமல் ராஜக்பசே இருவரும் முதல் முறையாக நாடாளுமன்றத்தில் கூட்ட
-
கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 அரசு ஆசிரியர்களின் பணி காலம் நீட்டிப்பு: பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியீடு
19 May 2022தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியர்களுக்கு ஓராண்டு கால பணி நீட்டிப்பு செய்து, பள்ளிக்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
-
பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம்: சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல்
19 May 2022பள்ளிகளில் குழந்தைகளை பாலியல் தொல்லைகளில் இருந்து பாதுகாக்க கண்காணிப்பு கேமரா பொருத்துவதை கட்டாயமாக்கலாம் என்று சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியுள்ளது.
-
சட்டவிரோத பணமாற்ற வழக்கு: காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் குற்றவாளி: டெல்லி என்.ஐ.ஏ. நீதிமன்றம் தீர்ப்பு
19 May 2022சட்டவிரோத பணமாற்ற மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்ததாக தொடரப்பட்ட வழக்கில் காஷ்மீர் பிரிவினைவாதி யாசின் மாலிக் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபணமானதால் அ
-
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம்: அமைச்சர் ராஜகண்ணப்பன் தலைமையில் நடந்தது
19 May 2022பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு நல உதவித் திட்டங்கள் மற்றும் துறையின் கீழ் ச
-
கிருஷ்ணகிரி கே.ஆர்.பி. அணையில் இருந்து 2,300 கனஅடி தண்ணீர் திறப்பு: கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
19 May 2022கிருஷ்ணகிரி கே.ஆர்.பி.
-
மகளிர் உலக குத்துச்சண்டை: நிகத் ஜரீன் முன்னேற்றம்..!
19 May 2022துருக்கி நாட்டில் உள்ள இஸ்தான்புல் நகரில் நடப்பு ஆண்டுக்கான மகளிர் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 8-ம் தேதி தொடங்கியது.
-
புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்
19 May 2022புகுஷிமா அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடும் திட்டத்துக்கு ஜப்பானின் அணுசக்தி ஒழுங்குமுறை ஆணையம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட ஆலையில் இருந்து சுமார்
-
10-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தால் திருத்தும் பணி ஜூன் 2-9 வரை நடைபெறும் தமிழக தேர்வுத்துறை அறிவிப்பு
19 May 202210-ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தால் திருத்தும் பணி ஜூன் 2-9 வரை நடைபெறும் என்று தமிழக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.
-
தினசரி பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்தது: இந்தியாவில் 2,364 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று
19 May 2022ஒருநாள் பாதிப்பு மீண்டும் 2 ஆயிரத்தை கடந்த நிலையில், இந்தியாவில் 2,364 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
-
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு இருந்ததைவிட தமிழகத்தில் பணவீக்கம் குறைந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது: முதல்வர் ஸ்டாலின்
19 May 2022தமிழகத்தில் பணவீக்கம் 5.37 சதவீதமாக குறைந்தது மகிழ்ச்சி அளிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.