முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கணினி ஆசிரியர் பணியிட அறிவிப்பு போலியானது : தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கம்

சனிக்கிழமை, 4 மே 2024      தமிழகம்
School-Education 2022 02 11

Source: provided

சென்னை : 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என பரவி வரும் போலியானது என தமிழக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.

தமிழக அரசு பள்ளிகளில் கணினி அறிவியல் பாடத்துக்கான ஆசிரியர் பணியிடம் காலியாக இருப்பதாக சமூக வலைதளங்களில், தமிழக அரசின் முத்திரையுடன் பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பு போன்ற புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. அதில், 5 ஆண்டுகால ஒப்பந்த அடிப்படையில் கணினி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவதாகவும், அதற்கு மாதம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக, பலரும் பள்ளிக்கல்வித்துறையை தொடர்ந்து விசாரித்தனர். இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இதுபோலியான அறிவிப்பு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், 'சமூக வலைதளங்களில் வைரலாகும் கணினி ஆசிரியர் பணியிடம் நிரப்புவது தொடர்பான தகவல் முற்றிலும் போலியானது, இதுபோன்ற அறிவிப்பினை நாங்கள் வெளியிடவில்லை. இதுபோன்ற மோசடி நடவடிக்கை தொடர்பாக மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்' என்று பள்ளிக்கல்வித்துறை தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து