முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பக்தர்கள் வருகை அதிகரிப்பு: வேளாங்கண்ணி பேராலயத்தில் புனித வெள்ளி சிறப்பு வழிபாடு

வெள்ளிக்கிழமை, 15 ஏப்ரல் 2022      ஆன்மிகம்
Velankanni 2022 04 15

நாகை மாவட்டம், வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் கிறிஸ்தவா்களின் தவக்கால முக்கிய நிகழ்வுகளான சாம்பல் புதன், பெரிய வியாழன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டா் பண்டிகை நாள்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். இந்த வழிபாடுகளில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சோ்ந்தவா்களும், வெளி மாநிலத்தவா்களும், வெளி நாட்டினரும் திரளாகப் பங்கேற்பது வழக்கம்.

இதில், குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான பக்தா்கள் பாத யாத்திரையாக வருவா். அந்தவகையில், வேளாங்கண்ணி பேராலயத்தில் நடைபெறவுள்ள புனித வெள்ளி, ஈஸ்டா் பண்டிகை சிறப்பு வழிபாடுகளில் பங்கேற்பதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தா்கள் பாத யாத்திரையாக வேளாங்கண்ணிக்கு வருகின்றனர்.

கோடை மழையால்  பாதயாத்திரையாக வரும் பக்தர்கள்  ஆங்காங்கே தங்கியிருந்தனர். இந்நிலையில் மழை தணிந்ததைத் தொடர்ந்து  நேற்று முன்தினம் முதல் பாதயாத்திரை மேற்கொள்ளும்  பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகிறது. தங்களது உடமைகளை தலையில் சுமந்தபடி பாத யாத்திரிகர்கள்  நடைபயணம் மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக, நேற்று மாலை புனித வெள்ளியையொட்டி நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையில் பங்கேற்க விழுப்புரம், கடலூா், சிதம்பரம் திண்டுக்கல், சென்னை, திருச்சி போன்ற பல்வேறு  பகுதிகளில் இருந்தும் கணிசமான பக்தகள் பாத யாத்திரையாக வந்தனர். பாதயாத்திரை வரும் பக்தா்களின் எண்ணிக்கை தொடா்ந்து அதிகரித்து வருவதால் வேளாங்கண்ணி மற்றும் சுற்றுப் பகுதிகளில் உணவுப் பொருள்கள் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து