முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.நா. உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் ஹிஜாப் அணிய வேண்டும் : ஆப்கனில் தலிபான்கள் உத்தரவு

புதன்கிழமை, 18 மே 2022      உலகம்
Taliban 2022 05 18

Source: provided

காபூல் : ஆப்கானிஸ்தானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் உதவிக்குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என தலிபான்கள் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.

தலிபான்கள் ஆப்கானிஸ்தானில் ஆட்சியமைத்த பின் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். குறிப்பாக, பெண்கள் பணிக்குச் செல்லக் கூடாது என்றும் அவர்கள் உயர்கல்வியை தொடர்க் கூடாது எனவும் புதிய உத்தரவுகளை பிறப்பித்து சர்ச்சையை ஏற்படுத்தினர்.

முன்னதாக, ஆப்கனில் பணிபுரியும் அனைத்துப் பெண்களும் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்ட நிலையில் தற்போது, ஆப்கனில் உள்ள ஐக்கிய நாடுகளின் உதவிக் குழுவில் பணியாற்றும் பெண் ஊழியர்களும் இனி கட்டாயம் ஹிஜாப் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளனர்.  இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில், 

எந்தப் பெண் ஊழியராவது ஹிஜாப் அணியாமல் இருந்தால் அவர்களிடம் கட்டாயம் இதை அணிய வேண்டும் என  கண்ணியமான’ முறையில் எடுத்துச் சொல்லப்படும்  எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து