முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மோசமான வானிலை எதிரொலி: சென்னை-டெல்லி இடையே 4 விமான சேவைகள் ரத்து - பயணிகள் தவிப்பு

திங்கட்கிழமை, 23 மே 2022      இந்தியா
Air-service 2022 02 28

Source: provided

டெல்லி : மோசமான வானிலை காரணமாக டெல்லியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பலத்த காற்றுடன் டெல்லியில் கனமழை பெய்ததால் 19 விமானங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டன. 

டெல்லிக்கு வந்த விமானங்கள் ஜெய்ப்பூர், லக்னோ, இந்தூர், மும்பை, அமிர்தசரஸுக்கு திருப்பி விடப்பட்டன. சூறாவளி காற்றால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே,டெல்லியில் பலத்த மழையால் சென்னை - டெல்லி இடையே 4 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டது.. மேலும் 11 விமானங்கள் பல மணி நேரம் தாமதத்தால் சென்னை விமான நிலையத்தில் பயணிகள் அவதிக்கு உள்ளானர்கள்.

* சென்னையில் இருந்து டெல்லிக்கு மாலை 3.10 மணிக்கு செல்ல வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

* சென்னையில் இருந்து டெல்லிக்கு மாலை 5.15 மணிக்கு செல்ல வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ரத்தானது.

* டெல்லியில் இருந்து மாலை 4 மணிக்கு சென்னை வர வேண்டிய விஸ்தாரா ஏர்லைன்ஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது. 

* டெல்லியில் இருந்து நள்ளிரவு 12.15 மணிக்கு சென்னை வர வேண்டிய இண்டிகோ ஏர்லைன்ஸ் ரத்து செய்யப்பட்டது.

* டெல்லியில் இருந்து சென்னை வரும் 5 விமானங்களும் சென்னையில் இருந்து டெல்லி செல்லும் 6 விமானங்களும் தாமதமாக இயக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!