முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

15-18 வயதுடைய 80 சதவீத சிறார்களுக்கு முதல் தவணை தடுப்பூசி: மாண்டவியா

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      இந்தியா
Mansuk-Mandavia 2022 01 02

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் 15 முதல் 18 வயது வரையுள்ள சிறார்களில் 80 சதவீதத்துக்கும் அதிகமானோருக்கு முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறினார்.

செவ்வாய்க்கிழமை காலை 7 மணி வரை, இந்தியாவில் கொரோனா தடுப்பூசிகளின் மொத்த எண்ணிக்கை 192.52 கோடியைத் தாண்டியுள்ளது. 12-14 வயதிற்குப்பட்டவர்களுக்கான கொரோனா  தடுப்பூசி மார்ச் 16 அன்று தொடங்கப்பட்டது, இதுவரை 3.30 கோடிக்கும் அதிகமான சிறார்களுக்கு முதல் தவணை செலுத்தப்பட்டுள்ளது. 

கடந்த ஜனவரி 3 முதல் 15-18 வயதுக்குட்பட்டவர்களுக்கு இந்தியா தடுப்பூசி போடத் தொடங்கியது. இதுவரை இந்த வயதினரில் 5.92 கோடி பேர் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது. இளம் இந்தியா உலகின் மிகப்பெரிய தடுப்பூசி இயக்கத்தை புதிய உயரத்திற்குக் கொண்டு செல்கிறது. 15-18 வயதுக்குட்பட்ட சிறார்களில்  80 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனா தடுப்பூசியின் முதல் தவணையை எடுத்துள்ளனர் என்று மாண்டவியா ட்வீட் செய்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து