முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கை எதிர்கொள்ள தமிழக அரசின் வழக்கறிஞர்கள் குழு முல்லை பெரியாறு அணையில் ஆய்வு

சனிக்கிழமை, 28 மே 2022      தமிழகம்
Periyar-Dam 2022-05-28

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தவும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளவும், கேரள அரசு புதிய அணை கட்டுவதை தடுக்கவும், தமிழக அரசு சார்பில் பல்வேறு வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடங்கப்பட்டன. அதே போல் கேரள அரசு, முல்லைபெரியாறு அணை பலமிழந்து விட்டது என்றும் புதிய அணை கட்டவேண்டும் எனவும் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்குகள் தொடர்பாக தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில்  ஆஜராவதற்கு தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, அரசு மூத்த வக்கீல் உமாபதி, ஆவணங்கள் பதிவு வக்கீல் குமணன் மற்றும் காவரி தொழில்நுட்ப குழு தலைவர் செல்வராஜ் ஆகியோர் கொண்ட குழுவினர் முல்லை பெரியாறு அணைப் பகுதிக்கு சென்று ஆய்வு நடத்தினர். 

பிரதான அணை, பேபிஅணை, 13 மதகுகள், நீர்கசியும் அளவு உள்ளிட்டவைகளை பார்வையிட்டனர். அவர்களுக்கு கண்காணிப்பு பொறியாளர் சுகுமார், செயற்பொறியாளர் சாம்இர்வின், கோட்டபொறியாளர் குமார் ஆகியோர் விளக்கம் அளித்தனர்.  அவர்களுடன் உதவி பொறியாளர்கள் ராஜகோபால், பரதன், மயில்வாகனன், சென்ராம் ஆகியோரும் உடனிருந்தனர். ஆய்வுக்குப்பின் வக்கீல் குழுவினர் தேக்கடி திரும்பினர்.  முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை நிலவரப்படி 132.10 அடியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து