முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜூலை 11-ம் தேதி நடக்கவிருக்கும் அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க வேண்டும்: தலைமை தேர்தல் ஆணையத்தில் ஓ.பன்னீர் செல்வம் மனு

வெள்ளிக்கிழமை, 24 ஜூன் 2022      அரசியல்
OPS 2022 01 28

 ஜூலை 11-ம் தேதி நடைபெறவுள்ள அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டத்திற்கு தடை விதிக்க கோரி அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் நேற்று மனு அளிக்கப்பட்டது.

பரபரப்பான சூழ்நிலை மற்றும் சலசலப்புக்கு இடையை நேற்று முன்தினம் அ.தி.மு.க பொதுக்குழு முடிந்த நிலையில், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், அவரது மகன் ஓ.பி.ரவீந்திரநாத், வழக்கறிஞரும், எம்எல்ஏவுமான மனோஜ் பாண்டியன் உள்ளிட்ட 5 பேர் நேற்று முன்தினம் இரவு விமானத்தில் டெல்லி புறப்பட்டுச் சென்றனர். அ.தி.மு.கவில் ஏற்பட்டுள்ள ஒற்றைத் தலைமை சர்ச்சை, பொதுக்குழுவில் நடந்த நிகழ்வுகள் ஆகியவற்றுக்கு தீர்வுகாண தேர்தல் ஆணையத்தை அணுக ஓபிஎஸ் தரப்பு திட்டமிட்டிருப்பதாக கூறப்பட்டது.

டெல்லி புறப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், முன்னதாக செய்தியாளர்களிடம் கூறும்போது, “குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் திரவுபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார். அதில் பங்கேற்க வேண்டும் என்று பாஜக நிர்வாகிகள் அழைத்துள்ளனர். அதற்காக டெல்லி செல்கிறேன்” என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் டெல்லியில் உள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் சார்பில் அவரது வழக்கறிஞர்கள், மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளனர். அதில், "அ.தி.மு.கவின் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொண்டு, கட்சி தலைமைப் பதவியை மாற்றம் செய்வதற்கு இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அணியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக வரும் ஜூலை 11-ம் தேதி சட்ட விரோதமாக செயற்குழு மற்றும் பொதுக்குழுவுக்கு மீண்டும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்காக முறையான அனுமதி எதுவும் இதுவரை பெறவில்லை. எனவே 11-ம் தேதி கூட்டத்திற்கு அனுமதி வழங்க கூடாது. மேலும் சட்டவிதிகளில் திருத்தம் மேற்கொண்டு கட்சியின் தலைமைப் பதவியை மாற்றுவதற்கு தடை விதிக்க வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து