முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

22 ஆண்டுகளுக்கு பிறகு குஷ்பு வெளியிட்ட வீடியோ

சனிக்கிழமை, 2 ஜூலை 2022      சினிமா
Untitled-2

Source: provided

பழைய பாடல்களை இன்றைக்கு ரீமிக்ஸ் என்ற பெயரில் போட்டு துவைப்பது வாடிக்கையாகி விட்டது. இதில் ஒரு சில பாடல்கள் சூப்பர்ஹிட்டாவதும் உண்டு. அண்மையில் கமல் நடிப்பில் வெளியாகி வசூலை வாரி குவித்த விக்ரம் படத்தின் டைட்டில் சாங் ரீமிக்ஸ் ஆகி இளசுகளின் விருப்ப பாடலாக மாறியது.

அதே போல அடிக்கடி ரீமிக்ஸ் கொடுத்து அசத்தி வருபவர் யுவன் சங்கர் ராஜா. அவர் அண்மையில் தனது தந்தையின் இசையில் கமல் நடித்த மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்ற பேரு வெச்சாலும் என்ற பாடலை ரீமிக்ஸாக கொடுத்து பட்டையை கிளப்பினார். இது இன்றைக்கும் இளைய மனங்களை அள்ளியது.

அதே போல தற்போது குஷ்பு சுந்தர் தயாரிப்பில் சுந்தர் சீ இயக்கும் டிக்கிலோனா படத்துக்காக 22 ஆண்டுக்கு முந்தைய பாடல் ஒன்றை யுவன் ரீமிக்ஸ் செய்து வெளியிட்டுள்ளார். இந்த பாடலும் மைக்கேல் மதன காமராஜன் படத்தில் இடம் பெற்ற குஷ்பும் கமலும் சேர்ந்து ஆடிய ரம்பம்பம் ஆரம்பம் என்ற பாடலை குஷ்பு வெளியிடுகிறார்.

அந்த பாடலுக்கான டீசரை குஷ்பு வெளியிட்டார். தற்போது இந்த வீடியோ நெட்டில் வைரலாகி வருகிறது. 22 ஆண்டுகளுக்கு பிறகும் இளையராஜாவின் இசை இளசுகளை தாளம் போட வைத்துள்ளது ஆச்சரியம் தானஏ..

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!