முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லி புறப்பட்டு சென்றார் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு

ஞாயிற்றுக்கிழமை, 3 ஜூலை 2022      தமிழகம்
Venkaiah-Naidu 2022 07 03

Source: provided

சென்னை : சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை வழி அனுப்பி வைத்தார். 

இந்திய துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கடந்த 27-ம் தேதி டெல்லியில் இருந்து ராணுவ விமானத்தில் சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா ராஜன், மூப்படை அதிகாரிகள் வரவேற்றனர்.

பின்னர் சென்னை வண்டலூர் அடுத்த மாம்பாக்கம் காயாரில் வி.ஐ.டி. சார்பில் அமைக்கப்பட்டுள்ள வி.ஐ.எஸ்.இண்டர்நேஷனல் உறைவிட பள்ளியை கடந்த 29-ம் தேதி துணை ஜனாதிபதி வெங்கையாநாயுடு திறந்து வைத்தார். 

இந்நிலையில் நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டெல்லி புறப்பட்டு சென்றார். அவரை சென்னை விமான நிலையத்தில் அமைச்சர் தா.மோ. அன்பரசன் மற்றும் சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வழி அனுப்பி வைத்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!