LIC நிறுவனத்தில் உள்ள 'உதவியாளர் மற்றும் உதவி மேலாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
புதுச்சேரி : புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 1000-க்கும் மேற்பட்டோருக்கு காலரா தொற்று எதிரொலியாக அங்கு மாவட்டம் முழுவதும் பொது சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வாந்தி, வயிற்றுப்போக்கு அதிகரித்து வந்தது. இதனைக் கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்த நிலையில், புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குனர் டாக்டர் ஸ்ரீ ராமுலு நேற்று 2-ம் முறையாக காரைக்காலில் மருத்துவ குழுவினருடன் ஆய்வு மேற்கொண்டார். இதுவரை 1000-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பின்னர் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
காரைக்கால் மாவட்டத்தில் சமீபகாலமாக கடுமையான வயிற்றுப்போக்கு நோய்தொற்று அதிகளவில் பதிவாகி வருகின்றன. மேலும் பரிசோதிக்கப்பட்ட பெரும்பாலான தண்ணீர் மாதிரிகள் திருப்திகரமாக இல்லை. சில நோயாளிகளுக்கு காலரா தொற்று உறுதியாகியுள்ளது. மேலும், தினசரி மருத்துவமனைக்கு வயிற்றுப்போக்குடன் வரும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவற்றைக் கருத்தில் கொண்டு, சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை இயக்குனரகம் காரைக்கால் மாவட்டத்தை பொது சுகாதார அவசர நிலையாக பிரகடனப்படுத்தி அறிவித்துள்ளது.
புதுச்சேரியைச் சேர்ந்த சுகாதாரக் குழுவின் ஒருங்கிணைப்புடனும், நகராட்சி, பொதுப்பணித்துறை போன்ற துறைகளின் ஒருங்கிணைப்புடனும் அனைத்து மறுசீரமைப்பு மற்றும் மேலாண்மை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. பொதுமக்கள் விழிப்புடன் இருப்பதுடன், கொதிக்க வைத்த தண்ணீரை குடிக்கவும். சாப்பிடும் முன், கை கழுவுதல் மற்றும் தனிப்பட்ட சுகாதார நடவடிக்கைகளை உறுதிப்படுத்தவும். சரியாகக் கழுவி சமைத்த உணவை உட்கொள்ளவும். பாதுகாப்பான கழிப்பிட வசதிகளைப் பயன்படுத்தவும். திறந்த வெளியில் மலம் கழிப்பதைத் தவிர்க்கவும். வயிற்றுப்போக்கு அதிகமாக இருந்தால் அல்லது வாந்தி எடுத்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டுகிறோம்.
ஓ.ஆர்.எஸ். கரைசலின் முக்கியத்துவம் குறித்து அறிந்து, வீட்டிலேயே ஓ.ஆர்.எஸ். தீர்வை உருவாக்க கற்றுக் கொள்ளுங்கள். இது நோயின் தீவிரத்தை தடுக்க உள்ளூர் நல்வழித்துறை குழு மற்றும் சுகாதார குழு உதவும். அக்கம்பக்கத்தினர், மூத்த குடிமக்கள் யாராவது நோயால் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு தகவல் தெரிவிக்கவும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் காரைக்காலில் காலரா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 2 பேர் இணை நேய்களால் உயிரிழந்துள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. வாந்தி, வயிற்றுப்போக்கால் காரைக்காலில் இதுவரை 1,584 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், காலரா நோய் தடுப்பு முன்னேற்பாடுகள் எடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் அச்சம் அடைய வேண்டாம் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. காலரா பரவல் எதிரொலியாக இன்று முதல் 3 நாட்களுக்கு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட கலெக்டர் முகம்மது மன்சூர் உத்தரவிட்டுள்ளார். பள்ளி, கல்லூரிகளில் உள்ள குடிநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய உள்ளதால் கல்வி நிலையங்களுக்கு 3 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
பொரி உப்புமா![]() 18 hours 3 min ago |
கடாய் வெஜிடபிள்![]() 2 days 20 hours ago |
தக்காளி ரசம்![]() 1 week 5 min ago |
-
இந்திய லெஜண்ட்ஸ் அணி கேப்டன் ஆனார் கங்குலி
12 Aug 2022கொல்கத்தா : உலக ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டனாக இங்கிலாந்து முன்னாள் கேப்டன் இயன் மார்கன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கு: பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு மேலும் 15 நாட்கள் காவல் நீட்டிப்பு
12 Aug 2022கள்ளக்குறிச்சி மாணவி மரண வழக்கில் பள்ளி தாளாளர் ரவிக்குமார் உள்ளிட்ட 5 பேருக்கு ஆகஸ்ட் 26ம் தேதி வரை காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.
-
நாட்டில் மீண்டும் அதிகரித்த தினசரி கொரோனா பாதிப்பு : புதிதாக 16,561 பேருக்கு தொற்று
12 Aug 2022புதுடெல்லி : இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 16 ஆயிரத்து 561 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
-
2024-ல் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை: பீகார் முதல்வர் நிதிஷ் திட்டவட்டம்
12 Aug 2022பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கடந்த 3 நாட்களில் இரண்டாவது முறையாக தனக்கு 2024 தேர்தலில் பிரதமர் வேட்பாளராக களமிறங்கும் எண்ணம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
-
பதக்கம் வென்ற வீரர்களுக்கு விருந்தளிக்கிறார் பிரதமர்
12 Aug 202222-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கடந்த 8 ஆம் தேதி முடிவடைந்தது.
-
2022-ம் ஆண்டு சுதந்திர தின நல் ஆளுமை விருதுகள்: தமிழக அரசு அறிவிப்பு
12 Aug 2022சுதந்திர தின நல் ஆளுமை விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலை தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
முன்கூட்டியே தொடங்குகிறது 'பிபா உலகக் கோப்பை 2022' : முதல் போட்டியில் கத்தார்-ஈகுவேடார் மோதல்
12 Aug 2022தோஹா : கத்தார் நாட்டில் வரும் நவம்பரில் தொடங்கவுள்ள பிபா உலகக்கோப்பை 2022 கால்பந்து தொடர் ஒருநாள் முன்கூட்டியே தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
சென்னை உணவுத்திருவிழா தொடக்கம்: பீப் பிரியாணி அரங்கு இல்லாதது ஏன்? அமைச்சர் சுப்பிரமணியன் விளக்கம்
12 Aug 2022சென்னை உணவுத் திருவிழாவில் பீப் பிரியாணி அரங்கு இல்லாதது தொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார்.
-
சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் தொடரும் ஆங்கிலேய ஆர்டர்லி முறை சென்னை ஐகோர்ட் நீதிபதி வேதனை
12 Aug 2022நாம் ராஜா ராணி இல்லை, நாட்டின் குடிமக்கள்தான் ராஜா, ராணிகள் என்று தெரிவித்துள்ள சென்னை ஐகோர்ட், சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் ஆகியும் ஆங்கிலேய ஆர்டர்லி முறை இன்னும் தொட
-
நாடு முழுவதும் பத்து நாட்களில் 1 கோடி தேசியக் கொடிகள் விற்பனை: மத்திய அரசு
12 Aug 202210 நாட்களில் சுமார் 1 கோடி தேசிய கொடிகளை 1.5 லட்சம் தபால் நிலையங்கள் மூலம் நாடு முழுவதும் விற்பனை செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
பொறியியல் படிப்புகளுக்கான புதிய பாடத்திட்டம்: இறுதி செய்ய 17-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை
12 Aug 2022சென்னை : பொறியியல் புதிய பாடத்திட்டத்தை இறுதி செய்வது தொடர்பாக, 17-ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்
-
விமர்சனத்தைத் தொடர்ந்து இலவச பஸ்கள் முழுவதும் பிங்க் வண்ணத்தில் மாற்ற நடவடிக்கை
12 Aug 2022விமர்சனத்தை தொடர்ந்து இலவச பேருந்துகளுக்கு முழுமையாக பிங்க் வண்ணம் தீட்டும் பணியை போக்குவரத்துத் துறை தொடங்கியுள்ளது.
-
தொடர் விடுமுறையால் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பஸ்கள் இயக்கம்
12 Aug 2022சென்னை : இன்று முதல் 3 நாட்கள் விடுமுறையை முன்னிட்டு சென்னை கோயம்பேட்டில் இருந்து வெளியூர்களுக்கு 610 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்துறை தெரிவித்துள்ள
-
ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த அரசுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்
12 Aug 2022சென்னை : ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று ஓ. பன்னீர் செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
-
சுதந்திர தின விழா கொண்டாட்டத்தில் பெருங் கூட்டங்களை தவிர்க்க வேண்டும்: மாநிலங்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்
12 Aug 202275-வது சுதந்திர தின கொண்டாட்டங்களில் பெரும் கூட்டங்களை தவிர்க்க வேண்டும் என மாநிலங்களுக்கும், யூனியன் பிரதேசங்களுக்கும் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
-
வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு: சென்னையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு
12 Aug 2022சென்னை : வந்தே பாரத் ரெயில் பெட்டிகள் தயாரிப்பு குறித்து சென்னையில் ரயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஆய்வு செய்தார்.
-
தமிழகத்தின் அனைத்து நகராட்சி, கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களை கொண்டு தேசியக்கொடியை ஏற்ற வேண்டும் : தலைமை செயலாளர் இறையன்பு உத்தரவு
12 Aug 2022சென்னை : தமிழகத்தின் அனைத்து நகராட்சி மற்றும் கிராம ஊராட்சிகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள் எவ்வித சாதிய பாகுபாடின்றி தேசியக்கொடியை ஏற்ற வ
-
நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவிப்பு: மத்திய அரசு
12 Aug 2022நெல்லை : நெல்லை அகஸ்தியர் மலை யானைகள் காப்பகமாக அறிவித்துள்ளது மத்திய அரசு.
-
உலக யானைகள் தினம்: யானைகளை பாதுகாப்போம்: : பிரதமர் நரேந்திரமோடி டுவீட்
12 Aug 2022புதுடெல்லி : உலக யானைகள் தினத்தை முன்னிட்டு யானைகளை பாதுகாப்போம் என்று பிரதமர் நரேந்திரமோடி டுவீட் செய்துள்ளார்.
-
நிகழ்ச்சிகளில் மீதமாகும் உணவால் 10 லட்சம் பேர் பசி போக்கப்பட்டது: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
12 Aug 2022ஓராண்டில் நிகழ்ச்சிகளில் மீதம் இருக்கும் உணவைப் பெற்று 10 லட்சம் பேருக்கு உணவு வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
-
சுதந்திர தினவிழாவில் எவ்வித பாகுபாடின்றி தலைவர்கள் தேசியக்கொடியை ஏற்றுவதை உறுதி செய்ய வேண்டும் : மாவட்ட கலெக்டர்களுக்கு தலைமை செயலர் உத்தரவு
12 Aug 2022சென்னை : சுதந்திர தின அமுதப் பெருவிழாவில் எவ்வித சாதிய பாகுபாடின்றி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்களைக் கொண்டு அனைத்து நகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராம ஊராட்சிகள
-
டி-20 போட்டிகளில் 600 விக்கெட்டுகளை வீழ்த்தி பிராவோ வரலாற்று சாதனை
12 Aug 2022டி-20 கிரிக்கெட் போட்டிகளில் 600 விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் பவுலர் என்ற வரலாற்றுச் சாதனையை படைத்துள்ளார் மேற்கிந்திய தீவுகளை சேர்ந்த ஆல்-ரவுண்டர் பிராவோ.
-
ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பீகார் தொழிலாளி பலி
12 Aug 2022ஸ்ரீநகர் : காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் பீகார் தொழிலாளி உயிரிழந்தார்.
-
சிறப்பு புலனாய்விற்கான மத்திய அரசின் விருது: தமிழகத்தை சேர்ந்த 5 அதிகாரிகள் தேர்வு
12 Aug 2022சிறப்பு புலனாய்விற்கான ’மத்திய உள்துறை அமைச்சக விருது 2022’ 151 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
-
இ.பி.எஸ். உயிருக்கு அச்சுறுத்தல்: பாதுகாப்பு கேட்டு டி.ஜ.பி. அலுவலகத்தில் புகார் மனு
12 Aug 2022சென்னை : எடப்பாடி பழனிசாமியின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்றும் டி.ஜி.பி. அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.