முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

யானை விமர்சனம்

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      சினிமா
Elephant-review 2022 07 04

Source: provided

ஹரி இயக்கத்தில் வெடிக்காரன் பட்டி சக்திவேல் தயாரிப்பில் அருண் விஜய், பிரியா பவானி சங்கர் நடிப்பில் தற்போது வெளிவந்துள்ள படம் யானை. மேலும் சமுத்திரக்கனி, ராதிகா, யோகி பாபு, அம்மு அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். கதை, அருண் விஜையின் குடும்பம் பெரிய குடும்பம். அருண் விஜய் தனது அண்ணன்களான சமுத்திரனி, வெங்கட் போஸ், சஞ்சீவ் மூவரின் மீதும் அளவுகடந்த பாசத்தை வைத்துள்ளார். ஆனால் அண்ணன்கள் மூவரும் அருண் விஜய்யை இரண்டாம் தாய் வயிற்றில் பிறந்தவன் தான் என்று நினைக்கிறார்கள். இந்நிலையில் அருண் விஜய் குடும்பத்தை பழி வாங்க ராமச்சந்திர ராஜு சிறையில் இருந்து வெளியே வருகிறார். பின்னர் என்ன நடந்தது? அருண் விஜய் தனது குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை. அருண் விஜய் ஆக்ஷ்ன், காதல், செண்டிமெண்ட், பாசம் என அனைத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். பிரியா பவானி சங்கர் கதையோடு ஒன்றி பயணிக்கிறார். அம்மு அபிராமியின் நடிப்பு படத்திற்கு பலம். யோகி பாபு நகைச்சுவைக்காக மட்டுமல்லாமல், படத்துடன் ஒன்றிப்போகிறார். சமுத்திரகனியும் ராதிகாவும் எதார்த்தமான நடிப்பை கொடுத்துள்ளார். ஜி.வி. பிரகாஷின் பின்னணி இசை அருமை. சண்டாளியே பாடல் சூப்பர். படத்தின் ஒளிப்பதிவு சிறப்பு. மொத்தத்தில் இந்த யானையும் ஆயிரம் பொன்தான்...

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!