முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் பலி

திங்கட்கிழமை, 4 ஜூலை 2022      உலகம்
Pakistan 2022 07 04

Source: provided

இஸ்லாமாபாத் : பாகிஸ்தானில் பேருந்து விபத்தில் 19 போ் உயிரிழந்தனா். 11 போ் காயமடைந்தனர். 

பாகிஸ்தான் தலைநகா் இஸ்லாமாபாத்திலிருந்து குவெட்டா நோக்கி பயணிகள் பேருந்து ஒன்று புறப்பட்டு சென்று கொண்டிருந்தது. அதில் 30 பயணிகள் இருந்தனர். 

குவெட்டா அருகே மலைச்சாலையில் அந்த பேருந்து சென்று கொண்டிருந்த போது, ஒரு திருப்பத்தில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து 60 அடி ஆழத்தில் ஓடைக்குள் கவிழ்ந்தது. இதில் 19 போ் உயிரிழந்தனர். 

11 பேர் காயமடைந்தனர் என காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.  மழை மற்றும் பேருந்து வேகமாகச் சென்றதே விபத்துக்கு காரணம் எனக் கூறப்படுகிறது. உயிரிழந்தவா்களுக்கு பிரதமா் ஷாபாஸ் ஷெரீப் இரங்கல் தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!