முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியல்வாதிகளை தொடர்பு கொள்ளக்கூடாது: பாக். ராணுவ அதிகாரிகளுக்கு தளபதி அதிரடி உத்தரவு

புதன்கிழமை, 6 ஜூலை 2022      உலகம்
Umar-Jawad 2022-07-06

Source: provided

இஸ்லாமாபாத் : அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று ராணுவ அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 

பாகிஸ்தானில் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு ராணுவ தளபதியாக உமர் ஜாவத் பஜ்வா உள்ளார். இந்த நிலையில் ராணுவம் மற்றும் உளவுத்துறையான ஐ.எஸ். அதிகாரிகளுக்கு பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜாவத் பஜ்வா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். 

அதில், ராணுவ அதிகாரிகள், உளவுத்துறையைச் சேர்ந்த அதிகாரிகள், அரசியலில் இருந்து விலகி இருக்க வேண்டும். அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொள்வதை தவிர்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

தேவையற்ற சர்ச்சைகளால் ராணுவம் மற்றும் உளவுத்துறை மீது விமர்சனங்கள் வருவதை தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!