முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பதி கோவிலில் 2, 5 கிராம் தங்க டாலர் மீண்டும் விற்பனை

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2022      ஆன்மிகம்
thirupathi-2021-04-29

Source: provided

திருப்பதி : திருப்பதி கோவிலில் மீண்டும் 2, 5 கிராம் தங்க டாலர்களை தேவஸ்தான நிர்வாகம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளதால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒருபுறம் சாமி உருவமும், மறுபுறம் ஏழுமலையான் கோவில் தங்க கோபுரமும் பதிக்கப்பட்டு விற்பனை செய்யும் சாமி டாலர்களை வாங்கிச் சென்று வீட்டில் வைத்து வழிபட்டால் துன்பங்கள் நீங்கி, சுபிட்சம் பெருகும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். திருப்பதி தேவஸ்தானம் சார்பில் 2,5,10 கிராம் எடையுள்ள தங்க சாமி டாலர்களும், 5, 10 கிராம் வெள்ளி டாலர்களும், 5 மற்றும் 10 கிராம் வெண்கல சாமி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

2 கிராம் டாலர் ரூ. 10,000, 5 கிராம் டாலர் ரூ. 25 ஆயிரம் மற்றும் 10 கிராம் டாலர் ரூ. 50,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் மூலம் தேவஸ்தானத்திற்கு ஒரு நாளைக்கு ரூ. 10 லட்சம் வரை வருவாயாக கிடைத்தது. 

இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக 2 மற்றும் 5 கிராம் டாலர்கள் விற்பனை நிறுத்தப்பட்டு, 10 கிராம் எடையுள்ள சாமி டாலர்கள் விற்பனை செய்யப்பட்டு வந்தது. தரிசனத்திற்கு வரும் சாமானிய பக்தர்கள் 10 கிராம் எடையுள்ள தங்க சாமி டாலர்களை வாங்க முடியாமல் தவித்தனர். ஒரு நாளைக்கு 5 அல்லது 6 டாலர்கள் மட்டுமே விற்பனையானது.

இது குறித்து பக்தர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் புகார் அளித்தனர். பக்தர்களின் புகார்களை பரிசீலனை செய்த தேவஸ்தான அதிகாரிகள் மீண்டும் 2, 5 கிராம் தங்க சாமி டாலர்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். இதனால் பக்தர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து