முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரம்: அமைச்சரவையிலிருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கம்

வியாழக்கிழமை, 28 ஜூலை 2022      இந்தியா
sattarji----------2022-07-28

Source: provided

கொல்கத்தா: ஆசிரியர் நியமன முறைகேடு விவகாரத்தில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி மேற்கு வங்க அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

மேற்கு வங்கத்தில், ஆளும் திரிணமூல் காங்கிரஸ் அரசில் தொழில் துறை அமைச்சராக உள்ள பார்த்தா சாட்டர்ஜி, முன்பு கல்வி அமைச்சராக இருந்தபோது ஆசிரியர் பணி நியமனம் தொடர்பாக முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத் துறையினர் கடந்த ஜூலை 23ல் அவரை கைது செய்தனர். 

தற்போது அமலாக்கத்துறை காவலில் உள்ள பார்த்தா சட்டர்ஜியை பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும் என்று திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளர் குனல் கோஷ் கூறியிருந்தார்.  இந்நிலையில் மேற்கு வங்க அமைச்சரவையில் இருந்து பார்த்தா சட்டர்ஜி நீக்கப்பட்டுள்ளதாக மேற்குவங்க அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 month 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 5 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 4 days ago
View all comments

வாசகர் கருத்து