முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழைக்கு வாய்ப்பு: வங்கக்கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2022      இந்தியா
Indian-Meteorologkal 2022 0

வங்கக்கடலில் வடமேற்குப் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 7) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் அடுத்த 2 தினங்களில் மழை படிப்படியாகக் குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கேரளாவில் தென்மேற்கு பருவ மழை தீவிரம் நிலை அடைந்து வருகிறது. பல மாவட்டங்களில் ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதுவரை கேரளாவில் கனமழைக்கு 18 பேர் பலியாகினர். நூற்றுக்கணக்கான வீடுகள் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன. வெள்ளத்தில் சாலைகள் பல அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1000-க்கும் மேற்பட்ட மக்கள் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் 8ம் தேதிக்குப் பின்னர் கேரளா, கர்நாடகா மாநிலங்களில் மழை படிப்படியாகக் குறையும் என்றும் வங்கக்கடலில் வடமேற்குப் பகுதியில் நாளை (ஆகஸ்ட் 7) புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இதற்கிடையே, மேற்கு திசைக் காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று (ஆகஸ்ட் 6-ம் தேதி) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி மற்றும் கோவை மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

7,8 மற்றும் 9ம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து

கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!