முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்தியாவின் 75-வது செஸ் கிராண்ட்மாஸ்டர் பிரணவ் வெங்கடேஷ் : நாட்டிற்கு பெருமை சேர்த்த 16 வயது தமிழக வீரர்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Pranav-Venkatesh 2022-08-07

Source: provided

சென்னை : செஸ் விளையாட்டில் இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரர் பிரணவ் வெங்கடேஷ். 

கிரிக்கெட், கால்பந்து அணிகளுக்கும், வீரர்களுக்கும் உலக கோப்பை எப்படி பெருங்கனவோ, செஸ் வீரர்களுக்கு அப்படித்தான் கிராண்ட்மாஸ்டர் பட்டமும். செஸ் விளையாடும் ஒவ்வொரு வீரரும் கிராண்ட்மாஸ்டர் ஆகவேண்டும் என்ற கனவுடன் தான் பயணிப்பார்கள்.

சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளை கடந்து கிராண்ட்மாஸ்டர்களாக திகழும் 3 செஸ் வீரர்களை தொடர்ச்சியாக வீழ்த்தி வெற்றி பெற்றால் கிராண்ட்மாஸ்டர் பட்டம் பெறலாம். அந்த 3 கிராண்ட்மாஸ்டர்களும் வெவ்வேறு நாடுகளை சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும்.

அன்தவகையில், 2500  புள்ளிகளை பெற்று இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டர் ஆனார் பிரணவ் வெங்கடேஷ். இந்தியாவிலிருந்து ஏற்கனவே 74 கிராண்ட்மாஸ்டர்கள் இருந்தநிலையில், 75-வது கிராண்ட்மாஸ்டராக  பிரணவ் வெங்கடேஷ் உயர்ந்திருக்கிறார்.

தமிழகத்தை சேர்ந்த 16 வயது இளம் செஸ் வீரரான பிரணவ் வெங்கடேஷ், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் கீழ் 2500 புள்ளிகளுக்கு மேல் பெற்று இந்தியாவின் 75-வது கிராண்ட்மாஸ்டராக உருவானார். தமிழகத்திலிருந்து கிராண்ட்மாஸ்டரான 27-வது செஸ் வீரர் பிரணவ் ஆவார். இதற்கு 26 தமிழக வீரர்கள் கிராண்ட்மாஸ்டர்களாக இருந்தனர். அவர்களுடன் பிரணவும் இணைந்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து