முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விக்டிம் விமர்சனம்

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      சினிமா
Victim-review 2022-08-08

Source: provided

பா.ரஞ்சித், சிம்புதேவன், வெங்கட் பிரபு, ராஜேஷ் ஆகிய நான்கு இயக்குனர்களின் ஆந்தாலஜி தொகுப்பு தான் இந்த விக்டிம். சோனி ஓடிடி தளத்தில் நேரடி ரிலீஸ் ஆகியுள்ளது. பா.ரஞ்சிதின் தமம் - ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் தான் இக்ககதை. கதை, புத்தர் சிலை, மீனை பிடிக்க துடிக்கும் சிறுமி என தான் சொல்ல வரும் அரசியிலுக்கு ஏற்ற அறிமுகத்தை கொடுக்கிறார் இயக்குனர். சிறிய நிலம் வைத்துள்ளவர்கள் படும் அவஸ்தை நம் கண் முன்னே வந்து போகிறது. உயிரை காப்பதை விட உயிரை பறிக்க  துடிக்கும் கயவர்கள் பற்றிய கதையை அழகாக மண் மனம் மாறாமல் அழகாக சொல்லி இருக்கிறார். ஒளிப்பதிவு படத்திற்கு ஸ்பெஷல், குரு சோமசுந்தரம், கலையரசன், ஜானி என பழக்கப்பட்ட நடிகர்கள் தான். சிம்புதேவனின் மொட்டை மாடி சித்தர் பாண்டஸி, காமெடி என தனக்கு பழக்கப்பட்ட கதை களத்தை எடுத்துள்ளார் சிம்புதேவன். நாசர் மற்றும் தம்பி ராமையா கூட்டணி இப்படத்தை சுவாரஸ்யம் ஆக்குகிறது. இறுதியில் யார் ஏமாற்றப்பட்டார்கள், யார் ஏமாந்தவர் என கிளைமாக்சில் சொல்லி முடிப்பது சிறப்பு. ராஜேஷின் மிராஜ்,  படம் ஹாரர் ஜானரில் தொடங்குகிறது. பிரியா பவானி ஷங்கர் மற்றும் நட்ராஜ் இதில் நடித்துள்ளனர். சென்னையில் ஈசிஆர் காட்டேஜில் ஒரு நாள் இரவு என்ன நடக்கிறது என்பதனை படமாகியுள்ளார். எனினும் சில நிமிடங்களில் இது ஹாரர் அல்ல எதோ சைக்கலாஜிக்கல் திரில்லர் தான் எடுக்க முயற்சித்துள்ளார் என்பது எளிதில் புரிந்து விடுகிறது.வெங்கட் பிரபுவின் கன்ஃபஷன், இரட்டை வாழ்க்கை வாழ்வதை பற்றி விவரித்துள்ளார் இயக்குனர். தனித்து இருக்கும் அமலாபால், அவளை கொலை செய்ய வருகிறார் பிரசன்னா. இந்த ஒன் லயன் கதையில் இரண்டு ட்விஸ்ட் வைத்து இயக்கியுள்ளார். மங்காத்தா விளையாட்டை போல இதுவும் சுவாரஸ்யம் தான். ஸ்டைலிஷ் மேக்கிங் இப்படங்களை தாராளமாக ஒருமுறை பார்க்கலாம். இயக்குநர்களின் கதைக்களம் படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து