முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும்: அமைச்சர் பொன்முடி அறிவிப்பு

திங்கட்கிழமை, 8 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Ponmudi 2022 05 16

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் தொடங்கும் என்று அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் இந்த கல்வியாண்டில் பொறியியல் படிப்புகளில் சேர ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த ஜூன் 20-ஆம் தேதி தொடங்கியது. விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க ஜூலை 19-ஆம் தேதிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்த நிலையில், சி.பி.எஸ்.இ தேர்வு முடிவுகள் வெளியாக தாமதமானதால் ஜூலை 27ஆம் தேதிவரை நீட்டிக்கப்பட்டது. தற்போது சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள் நடைபெற்று வந்தது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு பொறியியல் கலந்தாய்வு தொடங்கும் என்று கூறப்பட்டது. இதனால் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது.,

தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு வரும் 25-ம் தேதி முதல் அடுத்த மாதம் அக்.21-ம் தேதி வரை நடைபெறும். நீட் தேர்வு முடிவுகளால் கலந்தாய்வு நீட்டிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வு மட்டும் இல்லை, மாணவர்களின் நன்மையை கருதியும் பொறியியல் கலந்தாய்வு நீட்டித்திருக்கிறோம்.

மாணவர்களின் நலன் கருதி பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது. பொறியியல் கல்லூரிகள், கலை மற்றும் அறிவியில் கல்லூரிகளில் சமூகநீதியின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெறும். மாணவர்களும், பெற்றோர்களும் எந்தவிதமான அச்சத்துக்கும் உள்ளாக வேண்டாம். சரியான முறையில் மாணவர் சேர்க்கை நடைபெறும்" என்று அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து