முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இஸ்ரேல் தாக்குதலில் ஈரான் அதிபர் காயம்!

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      உலகம்
Israel 2024-12-29

Source: provided

டெஹ்ரான்: கடந்த மாதம் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான் காயம் அடைந்தாக தற்போது தகவல் வெளியாகி உள்ளது.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதாகவும், இதனால் தங்களுக்கு ஆபத்து ஏற்படும் எனக்கூறி கடந்த மாதம் அந்நாடு மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. ட்ரோன், ஏவுகணைகள் பயன்படுத்தி இந்த தாக்குதல் நடந்தது. இதற்கு பதிலடியாக ஈரானும் தாக்குதலில் ஈடுபட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். ஏராளமானோர் காயமடைந்தனர். அமெரிக்காவின் தலையீட்டால், இரு தரப்புக்கு இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஈரான் அதிபர் மசூத் பெஜஸ்கியான், ஈரான் பார்லிமென்ட் சபாநாயகர் முகமது பாகேர், நீதித்துறை தலைவர் மோசெனி எஜெய் உள்ளிட்டோர் கலந்து கொண்ட ஈரான் தேசிய கவுன்சில் கூட்டம் நடந்தது. இக்கூட்டம் நடந்த கட்டடத்தை குறிவைத்து, ஆறு ஏவுகணைகளை இஸ்ரேல் ஏவியது.

உடனடியாக ஆபத்து கால வழியாக அங்கிருந்த அனைவரும் வெளியேறினர். இருப்பினும், அதிபர் மசூத் ஜெஜஸ்கியான் உட்பட சிலர் காயமடைந்தனர் என ஈரான் புரட்சிகரப்படையுடன் தொடர்புடைய அமைப்பு தற்போது செய்தி வெளியிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இஸ்ரேல் தன்னை கொல்ல சதி செய்வதாக மசூத் பெஜஸ்கியான் ஏற்கனவே குற்றம்சாட்டி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து