முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!

ஞாயிற்றுக்கிழமை, 13 ஜூலை 2025      இந்தியா
Nasa-2024-10-15

Source: provided

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.

சர்வதேச விண்வெளி நிலையத்தில் 73-வது விண்வெளி குழுவில் இடம் பெற்றுள்ள ஆன் மெக்லைன், டகுயா ஒனிஷி, அலெக்ஸி ஜூப்ரிட்ஸ்கி, கிரில் பெஸ்கோவ், செர்ஜி ரைஷிகோவ், ஜானி கிம் மற்றும் நிக்கோல் அயர்ஸ் ஆகிய 7 விண்வெளி வீரர்கள் ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவர்களுடன் கடந்த மாதம் 25-ந்தேதி சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு 14 நாட்கள் பயணமாக சென்ற, இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா மற்றும் பெக்கி விட்சன், திபோர் கபு மற்றும் ஸ்லாவோஸ் உஸ்னான்ஸ்கி-விஸ்னீவ்ஸ்கி ஆகிய 4 பேரும் சேர்ந்து விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில் இவர்கள் ஆராய்ச்சியை முடித்து கொண்டு இன்று (திங்கட்கிழமை) சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைக்கப்பட்டுள்ள ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் விண்கலத்தின் கதவுகள் இந்திய நேரப்படி பகல் 2 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடர்ந்து, பகல் 2.25 மணிக்கு சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேரும் விண்கலத்திற்குள் நுழைய உள்ளனர்.

தொடர்ந்து மாலை 4.15 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிக்கப்படும். பின்னர் மாலை 4.35 மணிக்கு விண்கலம் பூமியை நோக்கி தன்னுடைய பயணத்தை தொடங்கும். சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பிறகு வருகிற 15-ந்தேதி பகல் சுமார் 3 மணி அளவில் பூமியை வந்தடைகின்றனர்.

குறிப்பாக, வடஅமெரிக்காவின் மேற்கு கடற்கரையில் பசிபிக் பெருங்கடலை ஒட்டி உள்ள கலிபோர்னியாவின் நீண்ட கடற்கரையில் விண்கலம் பத்திரமாக தரையிறக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அமெரிக்கா கடற்படையும் தயார் நிலையில் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 weeks ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து