முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டோனியின் விக்கெட் கீப்பிங்: பாக். முன்னாள் வீரர் விமர்சனம்

புதன்கிழமை, 10 ஆகஸ்ட் 2022      விளையாட்டு
Tony 2022 08 10

Source: provided

எல்லா காலத்திலும் சிறந்த விக்கெட் கீப்பர்களில் ஒருவராகக் கருதப்படும் எம்.எஸ். டோனி ஆகஸ்ட் 2020-ல் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக டி20 கிரிக்கெட்டில் விளையாடி வருகிறார். இந்நிலையில் யார் சிறந்த விக்கெட் கீப்பர் என்ற கேள்விக்கு ​​பதிலத்த லத்தீஃப் தென்னாப்பிரிக்க விக்கெட் கீப்பர்-பேட்டரான டிகாக்கை குறிப்பிட்டார். இது குறித்து அவர் கூறியதாவது:-

டோனி விளையாடிய காலங்களில் 21 சதவீதம் கேட்சுகளை தவறவிட்டார். இது பெரிய எண்ணிக்கையாகும். டோனி டெஸ்ட் கிரிக்கெட்டில் 256 கேட்சுகள் மற்றும் 38 ஸ்டம்பிங், ஒருநாள் போட்டிகளில் 321 கேட்சுகள் மற்றும் 123 ஸ்டம்பிங் மற்றும் டி20 போட்டிகளில் 57 கேட்சுகள் மற்றும் 34 ஸ்டம்பிங்குகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், ஒரு விக்கெட் கீப்பர் தவறவிட்ட வாய்ப்புகள் குறித்தும் ஒருவர் கவனம் செலுத்த வேண்டும். டோனி ஒரு பெரிய பெயர். ஆனால் நான் புள்ளிவிவரங்களுடன் கூறினால், அவரது (கேட்ச்) தவறவிட்டது 21 சதவீதமாகும் இவ்வாறு லத்தீஃப் கூறினார்.

____________

நியூசிலாந்து அணியில் இருந்து வெளியேறிய டிரெண்ட் போல்ட்

உலகத்தரம் வாய்ந்த வேகப்பந்து வீச்சாளர் ட்ரென்ட் போல்ட் புதன்கிழமை தனது சொந்த வேண்டுகோளின் பேரில் நியூசிலாந்து கிரிக்கெட்டுடனான (NZC)மத்திய ஒப்பந்தத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். 33 வயதான வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் பலதரப்பட்ட பேச்சு வார்த்தைகளுக்கு பிறகு இந்த முடிவு அவருக்கு கிடைத்துள்ளது. நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் இறுதியாக அவரது கோரிக்கைக்கு ஒப்புக்கொண்டது. இதனால் இனி வரும் போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகத்தில் உள்ளது.

இது குறித்து டிரெண்ட் போல்ட் கூறியதாவது., இது எனக்கு மிகவும் கடினமான முடிவு. இந்த நிலைக்கு வருவதற்கு நியூசிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆதரவிற்கு நான் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். எனது நாட்டிற்காக கிரிக்கெட் விளையாடுவது ஒரு குழந்தை பருவ கனவாக இருந்தது. என்னால் முடிந்த அனைத்தையும் நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். கடந்த 12 ஆண்டுகளில் பல சாதனைகள் புரிந்தேன். இந்த முடிவு எனது மனைவி கெர்ட் மற்றும் எங்கள் மூன்று மகன்களை பற்றியது. குடும்பம் எப்போதுமே எனக்கு மிகப்பெரிய உந்துதலாக இருந்து வருகிறது. அதற்கு முதலிடம் கொடுப்பதிலும், கிரிக்கெட்டுக்குப் பிறகு நம்மைத் தயார்படுத்திக் கொள்வதிலும் நான் வசதியாக உணர்கிறேன் என்றார்.

_____________

ஆஸி., பெண்கள் அணி கேப்டன் மெக்லானிங் தற்காலிகமாக ஓய்வு

ஆஸ்திரேலிய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மெக் லானிங் கிரிக்கெட்டில் இருந்து காலவரையின்றி விலக முடிவு செய்துள்ளார். ஆஸ்திரேலியாவின் அதிக கேப்டனாக இருக்கும் லானிங் தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த முடிவை எடுத்ததாகக் கூறினார்.  இதுகுறித்து மெக் லானிங் கூறியதாவது:-

இரண்டு வருடங்கள் பிசியாக இருந்த பிறகு என் மீது கவனம் செலுத்தி நேரத்தை செலவிடுவதற்கு ஒரு படி பின்வாங்க முடிவு செய்துள்ளேன். ஆஸ்திரேலியா கிரிக்கெட் வாரியம் மற்றும் எனது அணியினரின் ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவளாக இருக்கிறேன். இந்த நேரத்தில் எனது தனியுரிமை மதிக்கப்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட்டில் சிறந்த பேட்டர்களில் ஒருவர். தற்போது அவர் ஐசிசி டி20 தரவரிசையில் 2-வது இடத்திலும், ஒருநாள் போட்டிகளில் ஐந்தாவது இடத்திலும் உள்ளார்.

_______________

44-வது செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணிக்கு கிடைத்த திடீர் திருப்பம்

செஸ் ஒலிம்பியாட் போட்டியானது எதிர்பாராத முடிவுகளைத் தந்துள்ளது. ஓபன் பிரிவில் டாப் 10-ல் உள்ள அணிகள் எந்தப் பதக்கத்தையும் வெல்லவில்லை. இந்தியா ஏ அணி சிறப்பாக செயல்பட்ட போதிலும் 4-வது இடத்தையே பிடிக்க முடிந்தது. 

இந்தியா ஏ அணி தனது கடைசி ஆட்டத்தை அமெரிக்காவுக்கு எதிராக 2-2 என டிரா செய்தது. இந்தியா ஏ அணி 7 வெற்றி, 3 டிரா, 1 தோல்வியை பெற்று 17 புள்ளிகள் பெற்றது. அதேவேளையில் இந்தியா சி அணியால் 31-வது இடத்தையே பிடிக்க முடிந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து