எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : கொளத்தூர் தொகுதியில் புதிய திட்டப்பணிகளுக்கு நேற்று முதல்வர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். மேலும் ரூ. 30.77 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று கொளத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ரூ. 30.77 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், 2 கோடியே 71 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 5 கோடியே 63 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவில் முடிவுற்ற திட்டப் பணிகளையும் முதல்வர் திறந்து வைத்தார். மேலும் 12 கோடியே 30 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான கொளத்தூர் ஏரியினை மறுசீரமைக்கும் பணி மற்றும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளையும் அவர் தொடங்கி வைத்தார்.
முன்னதாக, கொளத்தூர், தொன்போஸ்கோ மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஜி.கே.எம். காலனி அரசு மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்-மார்க்கெட் தெரு சென்னை பெண்கள் மேல்நிலைப் பள்ளி, பெரம்பூர்-பந்தர் கார்டன் சென்னை மேல்நிலைப்பள்ளி, கொளத்தூர்-சென்னை மேல்நிலைப்பள்ளி, கொளத்தூர்-டான் பாஸ்கோ மேல்நிலைப்பள்ளி, பெரம்பூர்-பேப்பர் மில்ஸ் சாலை தி லூர்துஸ் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை சம்பலால் பஹாரியா ஜெயின் மேல்நிலைப்பள்ளி ஆகிய பள்ளிகளைச் சார்ந்த 927 மாணவர்கள் மற்றும் 619 மாணவியர்கள் என மொத்தம் 1546 மாணவ, மாணவியர்களுக்கு 78 லட்சத்து 30 ஆயிரத்து 909 ரூபாய் மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை முதல்வர் வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 225 முதலாம் ஆண்டு மாணவர்கள் மற்றும் 209 இரண்டாம் ஆண்டு மாணவர்கள், என மொத்தம் 434 மாணவர்களுக்கு கல்வி கட்டணத் தொகையாக தலா 10,000/- ரூபாயினை ரொக்கமாக முதல்வர் வழங்கினார்.
மேலும், 225 முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு ஸ்டைன்லெஸ் ஸ்டீல் வாட்டர் பாட்டில், பேனா, நோட்டுப் புத்தகம் ஆகியவற்றுடன் கூடிய புத்தகப்பைகளையும் வழங்கினார். மேலும், முதல்வர், பள்ளி சாலையில் உள்ள சென்னை மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கி, ஆசிரியர்களுக்கு சிறப்பு செய்தார்.
இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் எ.வ. வேலு, பி.கே.சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், சட்டமன்ற உறுப்பினர் தாயகம் கவி, துணை மேயர் மகேஷ்குமார், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச்செயலாளர் முனைவர் செந்தில்குமார், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், உயர்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் முனைவர் கார்த்திகேயன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை ஆணையர் குமரகுருபரன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 1 year 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 1 month ago |