Idhayam Matrimony

புதுமண தம்பதிகளுக்கு நூதன பரிசு தொகுப்பு : ஒடிசா அரசு முடிவு

ஞாயிற்றுக்கிழமை, 14 ஆகஸ்ட் 2022      இந்தியா
Naveen-Patnaik 2022-08-14

Source: provided

புவனேசுவரம் : ஒடிசாவில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ஒடிசா மாநிலத்தில் முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. அந்த மாநிலத்தில் அடுத்த மாதம் முதல் புதுமண தம்பதியருக்கு அரசு சார்பில் நூதன பரிசு தொகுப்பு வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த பரிசு தொகுப்பில் கருத்தடை மாத்திரைகள், ஆணுறைகள், குடும்ப கட்டுப்பாட்டு முறைகளையும் அதனால் ஏற்படும் நன்மைகளையும் பட்டியலிடும் கைப்புத்தகம், திருமண பதிவு சான்றிதழ் உள்ளிட்டவை இடம்பெறும். 

இதுபற்றி ஒடிசா மாநில குடும்ப கட்டுப்பாட்டு இயக்குனர் பிஜய் பானிகிரகி கூறுகையில், இந்த திட்டம் தேசிய சுகாதார திட்டத்தின் அங்கம் ஆகும். இதன் நோக்கம், புதுமண தம்பதியருக்கு குடும்ப கட்டுப்பாடு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துவதுதான் என குறிப்பிட்டார். இப்படி புதுமண தம்பதியருக்கு பரிசு தரப்போவது நாட்டிலேயே ஒடிசாவில்தான் முதல் முறையாக அரங்கேறப் போகிறது என்று தேசிய சுகாதார திட்டத்தின் ஒடிசா மாநில இயக்குனர் சாலினி பண்டிட் பெருமிதத்துடன் கூறினார். 

திருமணம் நடைபெறுகிற இடங்களுக்கே சென்று புதுமண தம்பதியருக்கு இந்த பரிசுத்தொகுப்பை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. ஒரு குழந்தைக்கும், அடுத்த குழந்தைக்கும் எவ்வளவு காலம் இடைவெளி விடுவது ஆரோக்கியமானது என்பது பற்றிய ஆரோக்கிய விழிப்புணர்வையும் புதுமண தம்பதியருக்கு ஏற்படுத்த ஒடிசா அரசு திட்டமிடப்பட்டுள்ளது.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து