முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்கட்டமாக வழங்க தமிழக அரசு திட்டம்: 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை

புதன்கிழமை, 17 ஆகஸ்ட் 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

முதல்கட்டமாக 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி மாணவிகள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்தனர். சமீபத்தில் இதற்கான நிதியையும் ஒதுக்கி தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டது.

இந்தநிலையில் முதல்கட்டமாக 2.50 லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து