முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

63-வது பிறந்தநாள்: நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர்,முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து

வியாழக்கிழமை, 18 ஆகஸ்ட் 2022      தமிழகம்
mk-staliln-----------2022-08-18

Source: provided

சென்னை: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிரதமர் மோடி, முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 63-வது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர்.  இந்நிலையில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, பிரதமர் மோடி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறி இருப்பதாவது., மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். வாழ்வில் மகிழ்ச்சி மற்றும் நல்ல ஆரோக்கியம் பெற உங்களை வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள். மகிழ்ச்சியுடனும் நல்ல உடல்நலனுடனும் வாழ வாழ்த்துகிறேன். என்று தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து