முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொதுக்குழு உறுப்பினர்கள் வர ஆரம்பித்துள்ளனர்: கூட்டு தலைமை இருந்தால்தான் அ.தி.மு.க. வலுவானதாக மாறும் : வைத்திலிங்கம் பேட்டி

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2022      அரசியல்
Vaithlingam 2022-08-19

அ.தி.மு.க.வுக்கு கூட்டுத் தலைமைதான் வேண்டும். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் தற்போது கிடையாது. எனவே கூட்டுத்தலைமை இருந்தால்தான், இந்த இயக்கம் வலுவானதாக மாற முடியும் என்று ஓ.பி.எஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் கூறியுள்ளார்.

தஞ்சையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த வைத்திலிங்கம் கூறியதாவது, 

நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், நடப்பவை நல்லவையாக இருக்கட்டும். மனகசப்புகளை மறந்து எதிர்காலத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் இந்த இயக்கத்தை வலுவான இயக்கமாக மீண்டும் தமிழக மக்களுக்கு நன்மை செய்யும் ஆளுங்கட்சியாக வரவேண்டும் என்பதை முன்னிறுத்தி ஓ.பி.எஸ் அழைப்பு விடுத்திருந்தார். அதனை அவர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள். 

எடப்பாடி பழனிசாமி கொடுத்த அறிக்கையை கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. நேற்று முன்தினம் முதல் பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களை நோக்கி வர ஆரம்பித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்தில் அதை நீங்கள் காண்பீர்கள். 

கட்சியின் நிறுவனத் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்தில் இருந்து கட்சிக்காக உழைத்தவர்கள், பாடுபட்டவர்கள் உள்பட கட்சியிலிருந்து பிரிந்து சென்றவர்களையும் இந்த இயக்கத்திற்கு வாருங்கள் என்று ஓ.பி.எஸ். அழைப்பு விடுத்துள்ளார். அதே போல், ஜெயலலிதா காலத்தில் இந்த இயக்கத்திற்கு பக்க பலமாக இருந்தவர்களையும் அழைத்துள்ளார். டிடிவி தினகரன், சசிகலா உள்ளிட்ட அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார். 

மேல்முறையீட்டு வழக்கை நாங்கள் சந்திப்போம். கூட்டுத் தலைமை வேண்டும். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா தற்போது கிடையாது. எனவே, கூட்டுத் தலைமை இருந்தால்தான், இந்த இயக்கம் வலுவானதாக மாற முடியும். மற்ற கட்சிகளை இந்த விவகாரத்தில் இணைத்து பேசாதீர்கள். இது எங்கள் உள்கட்சி பிரச்சினை. மற்ற கட்சிகள் இதில் தலையிடுவதை நாங்கள் விரும்பமாட்டோம் என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து