முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பரம்பிக்குளம் அணையில் உடைப்பு: பத்து நாட்களுக்கு பிறகே பராமரிப்பு பணி தொடங்கும்

வியாழக்கிழமை, 22 செப்டம்பர் 2022      தமிழகம்
Parambikulam-Dam 2022-09-22

Source: provided

பொள்ளாச்சி: பரம்பிக்குளம் அணையில் உடைப்பை சரிசெய்யும் பணி  தண்ணீர் வடிந்து 10 நாட்களுக்கு பிறகே தொடங்கும் என்று தெரிகிறது.

பரம்பிக்குளம்-ஆழியாறு என்னும் பி.ஏ.பி. திட்டத்தில் அதிக கொள்ளளவு கொண்டது பரம்பிக்குளம் அணை. இந்த அணை கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் இருந்தாலும் அணையை தமிழக அரசு தான் பராமரித்து வருகிறது. இந்த அணை 17 டி.எம்.சி.க்கு அதிகமாக கொள்ளளவு கொண்டது. நேற்று முன்தினம்அதிகாலை செல்ப் வெயிட் கழன்று விழுந்ததில் அணையின் 2-வது மதகு உடைந்து சேதமானது. அதில் இருந்து மளமளவென தண்ணீர் வெளியேறியது.

அணையின் பாதுகாப்பு கருதி மற்ற 2 மதகுகளும் உடனடியாக திறக்கப்பட்டன. 3 மதகுகள் வழியாக 20 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறி வீணானது. தகவல் அறிந்த நீர்ப்பாசன துறை அமைச்சர் துரைமுருகன், அமைச்சர் செந்தில் பாலாஜி, நீர் பாசன துறை செயலாளர் சந்திப் சக்சேனா, எம்.எல்.ஏ.க்கள் பொள்ளாச்சி ஜெயராமன், கேரள நெம்மாரை எம்.எல்.ஏ. பாபு ஆகியோர் சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டனர்.

இதுபற்றி துரைமுருகன் கூறுகையில் அணையில் மதகு உடைந்து தண்ணீர் வீணாவது வேதனை அளிப்பதாக தெரிவித்தார். மேலும் முதல்வரிடம் இது பற்றி தகவல் தெரிவித்து போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

கோவை மண்டல தலைமை பொறியாளர் முத்துசாமி தலைமையில் பரம்பிக்குளம் அணையில் முகாமிட்டு அதிகாரிகள் அணையை கண்காணித்து வருகின்றனர். இந்த விபத்தில் மதகுக்கு இணையான எடையுள்ள செல்ப் வெயிட், மதகுகளை இயக்கும் சங்கிலிகள், கியர் பாக்ஸ்கள், மதகுகள், கியர் வீல்கள் போன்றவை சேதம் அடைந்துள்ளன. இதுதவிர வேறு என்னென்ன பொருட்கள் சேதம் அடைந்துள்ளது என்பது குறித்தும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.

நேற்றைய காலை நிலவரப்படி வினாடிக்கு 12 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. 72 அடி உயரமுள்ள அணையில் 27 அடி வரை தண்ணீர் வடிந்தால் தான் பணிகளை தொடங்க முடியும். அதாவது அணையின் மட்டம் 45 அடி உயரம் வரை தண்ணீர் வடிய வேண்டும். தண்ணீரின் அளவு குறைய குறைய தண்ணீரின் வேகம் குறைவதால் மதகுகள் மட்டத்திற்கு அதாவது அணை 45 அடியை அடைய இன்னும் 10 நாட்கள் வரை ஆகலாம் என்று கருதப்படுகிறது.

அதற்குப் பிறகுதான் பணிகளை தொடங்க முடியும். கோவை மண்டல தலைமை பொறியாளர் உள்பட அதிகாரிகள் அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்ப உள்ளனர். சீரமைப்பு பணிகள் செய்து முடிக்க தண்ணீர் வடிந்த பிறகு ஒரு மாதத்திற்கு மேல் ஆகும் வாய்ப்பு உள்ளது. அணை 27 அடிக்கு நீர்மட்டம் குறையும் போது 5.8 டி.எம்.சி. தண்ணீர் வீணாகிவிடும். அதனால் இந்த ஆண்டு பாசனத்திற்கு சற்று பாதிப்பு இருக்கும் வாய்ப்பு உள்ளதாகவே கருதப்படுகிறது.

இருந்த போதும் அதிகாரிகள் மற்ற அணைகள் நிரம்பி உள்ளதால் அதில் உள்ள தண்ணீரை திருமூர்த்தி அணை பாசனத்திற்கு வழங்கி தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க திட்டமிட்டு அதற்கான பணிகளை செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து