முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டிராமா விமர்சனம்

சனிக்கிழமை, 24 செப்டம்பர் 2022      சினிமா
Drama-review 2022-09-24

Source: provided

சசிகலா புரொடக்ஷனின் முதல் படைப்பு இந்த டிராமா திரைப்படம். இயக்குநர் பார்த்திபனின் ‘இரவின் நிழல்’ என்ற சிங்கிள் ஷாட் படத்தை போலவே சிங்கிள் ஷாட் மூவி என்ற அறிவிப்புடன் வந்துள்ளது இப்படம். ஒரு காவல் நிலையம் ஓர் இரவு ஒரே ஷாட் என்ற த்திரில் ஆட்டம் தான் இந்த டிராமா படம். கதை, ஒரு காவல்நிலையத்தில் ஒருநாள் இரவில் திடீரென மின்சாரம் கட் ஆகிறது. அந்நேரம் அங்கு பணிபுரியும் தலைமைக்காவலர் மர்மமான முறையில் கொலை செய்யப்படுகிறார். அவரைக் கொன்றது யார்? என்பதை உயரதிகாரி கிஷோர் விடிவதற்குள் கண்டுபிடிப்பதுதான் இப்படத்தின் கதை. காவல்துறையினருக்குள்ளான மோதல்கள், காவல் நிலைய எதார்த்தங்களை எடுத்துக்காட்டுகின்றன இந்த டிராமா. எஸ்.ஐ. ஜெய்பாலா காவ்யாபெல்லு ஆகியோரின் காதல்காட்சிகள் இளமைத்துள்ளலாக அமைந்திருக்கின்றன. விசாரணை அதிகாரியாக நடித்திருக்கும் கிஷோர் பொருத்தமான தேர்வு. ஒரு காவல் நிலையம் ஓர் இரவு ஒரே ஷாட் என்கிற பல ஆபத்தான விளையாட்டை கையிலெடுத்து அதில் வெற்றியும் பெற்றுள்ளார் இயக்குனர் அஜூ குளுமலா. கிளைமாக்சில் சார்லியின் கொலைக்கான காரணம் வெளிப்படும்போது அதில் அடங்கியுள்ள நீட் தேர்வு குறித்த கருத்து நம்மை அதிர வைக்கிறது. மொத்ததில் இது ஒரு அருமையான டிராமா.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து