முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுத்தை புலிகளுக்கு பாரம்பரிய : முறையில் பெயர் சூட்டுங்கள் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      இந்தியா
Modi 2022-09-25

Source: provided

புது டெல்லி: சிறுத்தை புலிகளுக்கு பாரம்பரிய முறையில் பெயர் சூட்ட நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தனது மான் கீ பாத் நிகழ்ச்சியில் அழைப்பு விடுத்தார். 

பிரதமர் மோடி, மான் கீ பாத் என்ற நிகழ்ச்சியின் மூலம் மாதம்தோறும் கடைசி ஞாயிற்று கிழமைகளில் அகில இந்திய வானொலி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார். அதன்படி, இந்த மாதத்திற்கான மான் கீ பாத் நிகழ்ச்சி நேற்று காலை ஒலிபரப்பானது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரதமர் மோடி பேசியதாவது, 

சீட்டாக்கள் (சிறுத்தைப்புலி) இந்தியாவுக்கு மீண்டும் வந்ததற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள மக்கள் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். அவற்றை பற்றி பேசும்படி எண்ணற்றோர் குறுஞ்செய்திகளை அனுப்பி வருகின்றனர். 1.3 கோடி இந்தியர்கள் ஆனந்தத்திலும், பெருமையாலும் நிரம்பியுள்ளனர். சிறுத்தைப்புலிகளை அதிரடி படை ஒன்று கண்காணிக்கும் பணியில் ஈடுபடும். அதன் அடிப்படையில், நீங்கள் எப்போது சிறுத்தைப் புலிகளை பார்வையிடலாம் என்பது முடிவு செய்யப்படும் என கூறினார். 

தொடர்ந்து அவர் பேசும் போது, சிறுத்தைப்புலிகளுக்கு பெயர் சூட்டுவது மற்றும் அதற்கான பிரசாரத்திற்கு மக்களாகிய உங்களது பார்வைகளை பகிர்ந்து கொள்ளும்படி நான் கேட்டு கொள்கிறேன். நமது பாரம்பரிய முறையின்படி அவற்றுக்கு பெயர் சூட்டினால் அது சிறப்புடன் இருக்கும். இதே போன்று, விலங்குகளை மனிதர்கள் எப்படி நடத்த வேண்டும் என்ற ஆலோசனைகளையும் வழங்குங்கள். இந்த போட்டியில் நீங்களும் பங்கெடுத்து கொள்ளுங்கள். சிறுத்தைப்புலிகளை முதன்முறையாக காணும் வாய்ப்பு பெறும் நபர் நீங்களாக கூட இருக்கலாம் என கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து