முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலும் 538 பேருக்கு கொரோனா : தமிழக சுகாதார துறை தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 25 செப்டம்பர் 2022      தமிழகம்
India-Corona 2022 03 15

Source: provided

சென்னை : தமிழகத்தில் நேற்று மேலும் 538 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இது குறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- தமிழகத்தில் நேற்று புதிதாக 538 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இதில் அதிகபட்சமாக சென்னையில் 110 பேர், செங்கல்பட்டில் 51 பேர், கோவையில் 35 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு 35,80,439-ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் நேற்று யாரும் உயிரிழக்கவில்லை. இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 38,046ஆக உள்ளது.

நேற்று ஒரே நாளில் மட்டும் 492 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் இதுவரை குணமடைந்தோர் எண்ணிக்கை 35,36,998-ஆக உயர்ந்துள்ளது. தற்போது 5,395 பேர் கொரோனா சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு சுகாதார துறை தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து