முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடை பயணத்தின் போது சிறுவர்களுடன் கால்பந்து விளையாடிய ராகுல் காந்தி

திங்கட்கிழமை, 26 செப்டம்பர் 2022      இந்தியா
Ragul 2022--09-26

ஒற்றுமைக்கான நடை பயணத்தின் போது சிறுவர்களுடன் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கால்பந்து விளையாடும் விடியோ வைரலாகி வருகின்றது.

மத்தியில் ஆளும் பாஜகவுக்கு எதிராக மக்களை ஒன்றுதிரட்டும் நோக்கில் ‘பாரத் ஜோடோ’ நடைப்பயணத்தை காங்கிரஸ் நடத்தி வருகிறது. அக்கட்சி எம்.பி. ராகுல் காந்தி நடைப்பயணத்தை முன்னின்று நடத்தி, செல்லும் இடங்களில் மக்களைச் சந்தித்து வருகிறார். தமிழகத்தில் நிறைவடைந்த நடைப்பயணம், தற்போது கேரளத்தில் நடைபெற்று வருகிறது.

நேற்று காலை பாலக்காடு மாவட்டத்தில் இருந்து நடைப்பயணம் தொடங்கிய நிலையில், கால்பந்துகளுடன் சிறுவர்களும் ராகுல் காந்தியுடன் நடைப்பயணத்தில் பங்கேற்றனர். சிறுவர்கள் அனைவரும் கால்பந்து விளையாடிக் கொண்டே நடைப்பயணம் மேற்கொண்ட நிலையில், அவர்களுடன் ராகுல் காந்தி கால்பந்து விளையாடினார். அந்த விடியோ சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகின்றது. மொத்தம் 150 நாள்கள் கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை 3,600 கி.மீ. நடைப்பயணம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து