எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
ஐதராபாத் : சர்வதேச டி20 போட்டிகளில் அதிகமான வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன்கள் வரிசையில் விராட் கோலியை பின்னுக்குத் தள்ளி ரோஹித் இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
33 போட்டிகள்...
ஆஸி. அணிக்கு எதிராக ஐதாராபாதில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற மூன்றாவது மற்றும் கடைசி டி20 ஆட்டத்தில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரையும் 2-1 என கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் ரோஹித் சர்மா 42 போட்டிகளில் தலைமை தாங்கி 33 போட்டிகள் வென்று இரண்டாமிடத்துக்கு முன்னேறியுள்ளார். விராட் கோலி தலைமையில் 50 போட்டிகளில் 32 போட்டிகள் வென்று மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டார். எம்.எஸ்.டோனி 72 போட்டிகளில் தலைமை தாங்கி 42 போட்டிகள் வென்று முதலிடத்தில் இருக்கிறார்.
வெற்றி சதவீதம்...
மேலும், ரோஹித் சர்மா வெற்றி சதவிகிதத்திலும் இந்திய அளவில் முதலிடமும், உலக அளவில் இரண்டாமிடமும் பிடித்துள்ளார். முதல் இடம் 80.39 சதவிகிதத்துடன் ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஸ்கர் இருக்கிறார். ரோகித் 78.57 சதவிகித்த்துடன் இரண்டாமிடம். சர்ப்ராஸ் அஹமது மூன்றாவது இடம். விராட் கோலி இதில் 5வது இடம்.
1) எம்.எஸ்.டோனி - 42 வெற்றிகள்.
2) ரோஹித் சர்மா - 33 வெற்றிகள்.
3) விராட் கோலி - 32 வெற்றிகள் .
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |


