முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காலை உணவு திட்டம்: டுவிட்டரில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      தமிழகம்
Stalin 2020 07-18

Source: provided

சென்னை; காலை உணவுத்திட்டம் மிகமிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை புகழ்பெற்ற நாளிதழ்கள் உறுதி செய்திருப்பது என் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தருவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

முதல்வர் மு.க.ஸ்டாலினின் கனவு திட்டமான அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு வழங்கும் திட்டம் தமிழகம் முழுவதும் கடந்த 15-ம் தேதி தொடங்கி வைக்கப்பட்டது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் இந்த திட்டத்தினை செயல்படுத்தும் வகையில் தமிழக அரசு ரூ. 33.56 கோடி நிதி ஒதுக்கீடு செய்து சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், காலை உணவுத்திட்டம் குறித்து சிறப்பாக எழுதியுள்ள நாளிதழ்களுக்கு எனது நன்றி என்று முதல்வர்  மு.க.ஸ்டாலின் தனது டுவீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

காலை உணவுத் திட்டம் குறித்து சிறப்பாக எழுதியுள்ள நாளிதழ்களுக்கு எனது நன்றி.  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் தொடங்கியது முதல், நாள்தோறும் கண்காணிக்கிறேன். எவ்விதக் குறைபாடுமின்றி, சரியாக நடக்க வேண்டும் என்பதில் கவனமாக இருந்து வருகிறேன்.  முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மிகமிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதை புகழ்பெற்ற நாளிதழ்கள் உறுதி செய்திருப்பது என் உள்ளத்துக்கு மகிழ்ச்சியைத் தருகிறது.  பிஞ்சுக் குழந்தைகளின் மகிழ்ச்சி என் நெஞ்சிலும் நிறைகிறது. இவ்வாறு அவர் அதில் பதிவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து