முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அக்டோபர் மாதத்தில் மட்டும் வங்கிகளுக்கு 21 நாள் விடுமுறை ?

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2022      வர்த்தகம்
Bank-2022-09-27

விழாக்காலம் தொடங்கிவிட்டது. நாடு முழுவதும் நவராத்திரி பண்டிகை கோலாகலமாக தொடங்கியிருக்கும் நிலையில், அக்டோபர் மாதத்தில் மட்டும் விடுமுறை மற்றும் வார இறுதி நாள்கள் என 21 நாள்களுக்கு வங்கிகள் இயங்காது என்று செய்திகள் வெளியாகியுள்ளன.

ஆனால், 21 நாள்கள் என்றால் ஒரேயடியாக 21 நாள்கள் இல்லையாம். பல்வேறு மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகளை முன்னிட்டு ஆர்பிஐ வங்கியின் காலாண்டரில் அக்டோபர் மாதத்தில் மட்டும் 15 நாள்கள் விடுமுறை என்று இடம்பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் 6 வார இறுதி நாள்களுக்கான விடுமுறையும் சேர்ந்து கொண்டுள்ளது.

சில விடுமுறைகள் சில மாநிலங்களுக்கும், சில விடுமுறைகள் மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும் வகையில் இந்த பட்டியல் அமைந்துள்ளது. முக்கியமாக, அக்டோபர் ஒன்றாம் தேதி அரையாண்டு கணக்கு முடிப்பு பணிகளுக்காக வங்கிகள் இயங்காது.  இரண்டாம் தேதி ஞாயிற்றுக்கிழமை. காந்தி ஜெயந்தி. அரசு விடுமுறை. மூன்றாம் தேதி சில மாநிலங்களுக்கு துர்கா பூஜை விடுமுறை. நான்கு மற்றும் ஐந்தாம் தேதி ஆயுத பூஜை மற்றும் சரஸ்வதி பூஜை. அரசு விடுமுறை நாள்கள்.

அதுபோலவே அக்டோபர் 7 மற்றும் 8ஆம் தேதிகளில் ஒரு சில மாநிலங்களில் துர்கா பூஜை கொண்டாடப்படுமாம். அன்று விடுமுறையாம். அதன்பிறகு அக்டோபர் 8ஆம் தேதி மிலாது நபி அரசு விடுமுறை. சில மாநிலங்களுக்கு அக்டோபர் 13ஆம் தேதி கர்வா சௌத், அக்டோபர் 18ஆம் தேதி கடி பிஹு. அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி. அரசு விடுமுறை என இந்தப் பட்டியல் நீள்கிறது. 

இதனுடன் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும், வார இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமையும் சேர்ந்து கொள்ளும்பட்சத்தில், குறைந்தபட்சம் ஒரு மாநிலத்தில் இயங்கும் வங்கிகளுக்கு இந்த அக்டோபர் மாதத்தில் 10 நாள்களுக்கு மேல் விடுமுறை அளிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து