முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மெஸ்ஸியுடன் ஷாருக்கான் சந்திப்பு

சனிக்கிழமை, 13 டிசம்பர் 2025      விளையாட்டு
Messi-2025-12-13

கொல்கத்தாவில், கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸியை பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் நேரில் சந்தித்துள்ளார். ‘கோட் டூர் ஆஃப் இந்தியா’ எனும் திட்டத்தின்படி அர்ஜெண்டீனா கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸி இந்தியாவில் 3 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதன்படி, நேற்று (டிச. 13) அதிகாலை கொல்கத்தா வந்தடைந்த மெஸ்ஸிக்கு விமான நிலையத்தில் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த நிலையில், லேக் டவுன் திடலில் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் அவரது இளைய மகன் அப்ராம் ஆகியோர் கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸியை நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பில், அவர்கள் மூவரும் கைகுலுக்கி உரையாடியதோடு புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இந்த விடியோக்கள் இணையத்தில் வெளியாகி இருவரது ரசிகர்களிடையே மிகவும் வைரலாகி வருகின்றது.

தேனிலவை ரத்து செய்த தம்பதி

உலகின் தலைச்சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான லியோனல் மெஸ்ஸி இந்தியாவுக்கு வருகை தந்துள்ளார். அர்ஜென்டினா அணியின் கேப்டனான அவர் 14 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவுக்கு வந்துள்ளார். இதனால், கால்பந்து ரசிகர்கள் மிகுந்த உற்சாகமடைந்து உள்ளனர். அவர் கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் நடந்த நிகழ்ச்சியில் மெஸ்ஸி பங்கேற்றார். அவரை பார்ப்பதற்காக ஒரு தம்பதி தேனிலவை ரத்து செய்துள்ளது.

இது தொடர்பாக மெஸ்ஸி ரசிகை கூறியதாவது:- கடந்த வெள்ளிக்கிழமை எங்களுக்கு திருமணம் நடைபெற்றது. மெஸ்ஸியை பார்ப்பதற்காக எங்களது தேனிலவு திட்டத்தை ரத்து செய்து விட்டோம். நாங்கள் 2010-ம் ஆண்டு முதல் மெஸ்சியின் ஆட்டத்தை கவனித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார். அவரது கணவரும் இதே தகவலை தெரிவித்தார்.

தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு

16-வது ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) அடுத்த மாதம் (ஜனவரி) 15-ந்தேதி முதல் பிப்ரவரி 6-ந்தேதி வரை ஜிம்பாப்வே மற்றும் நமிபியாவில் நடக்கிறது. இதில் பங்கேற்கும் 16 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் தென் ஆப்பிரிக்க அணி ‘டி’ பிரிவில் தான்சானியா, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகளுடன் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் இந்த தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முகமது புல்புலியா தலைமையிலான அணியில் 15 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

தென் ஆப்பிரிக்க அணி விவரம்: முகமது புல்புலியா (கேப்டன்), ஜேஜே பாஸன், டேனியல் போஸ்மேன், கார்னே போத்தா, பால் ஜேம்ஸ், ஏனாதி கிட்ஷினி தெம்பலேத்து, மைக்கேல் க்ரூஸ்காம்ப், அட்னான் லகாடியன், பயண்டா மஜோலா, அர்மான் மனாக், பந்தில் எம்பாதா, லெதாபோ பஹ்லமோலாகா, ஜேசன் ரோல்ஸ், சோனி, ஜோரிச் வான்.

ஏழு படையப்பன் தோனி

நடிகர் ரஜினிகாந்தின் 75-வது பிறந்தநாள் நேற்று முன்தினம் கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு, ‘படையப்பா’ திரைப்படம் ரீ-ரிலீஸானது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், சவுந்தர்யா மற்றும் ரம்யா கிருஷ்ணன், சிவாஜி நடித்த ‘படையப்பா’ படம் 1999-ல் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. 

இந்த நிலையில், எம்.எஸ்.தோனியை ஏழு படையப்பன் என பெயரிட்டு, புகைப்படம் ஒன்றை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி (சி.எஸ்.கே.) எக்ஸ் வலைதளத்தில் பகிர்ந்து உள்ளது. அதில், ரஜினி துண்டை தோளில் போடுவது போன்று, தோனி துண்டை தோளில் போட்டு இறங்கி நடந்து வரும் புகைப்படம் வெளியிடப்பட்டு உள்ளது. தோனியின் ராசியான எண் ஏழு. அதனை குறிக்கும் வகையில் ஏழு படையப்பன் என சி.எஸ்.கே. பெயரிட்டு உள்ளது. 

அரையிறுதியில் இந்திய அணி 

5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டி சென்னை ராயப்பேட்டையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ வணிக வளாகத்திலும், நேரு பார்க்கில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியிலும் நடந்து வருகிறது. இதில் நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் தென்ஆப்பிரிக்காவை தோற்கடித்து தொடர்ந்து 2-வது முறையாக அரைஇறுதிக்கு முன்னேறியது. 

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீராங்கனை ஜோஸ்னா சின்னப்பா 7-4, 7-4, 7-2 என்ற நேர்செட்டில் டீகான் ரஸ்செலை தோற்கடித்தார். ஆண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீரர் அபய் சிங் 7-1, 7-6, 7-1 என்ற நேர்செட்டில் வான் நிகெர்க்கை விரட்டியடித்தார். மற்றொரு பெண்கள் ஒற்றையர் ஆட்டத்தில் இந்திய வீராங்கனை அனாஹத் சிங் 7-3, 7-4, 7-4 என்ற நேர்செட்டில் ஹாய்லி வார்டை வீழ்த்தினார்.

ஷ்ரேயாஸ் உடன் காதலா?

இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் அய்யரும் நடிகை மிருணாள் தாகூரும் ரகசியமாக காதலித்து வருவதாக இணையத்தில் தகவல் கசிந்தது. ஷ்ரேயாஸ் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் தங்களின் கேரியரின் உச்சத்தில் இருப்பதால் இந்த காதலை பொதுவெளியில் அறிவிக்க தயக்கம் காட்டுவதாகவும் தங்ஙளின் நண்பர்களின் பார்ட்டி மற்றும் விழாக்களில் மட்டும் சந்தித்து காதலை வளர்த்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில் இந்த வதந்திக்கு மிருணாள் தாகூர் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பதிலளித்துள்ளார். அதில், பிரபலங்களாக இருப்பவர்கள் என்றால் விமர்சனங்களும் வதந்திகளும் வாழ்க்கையின் ஒரு பகுதியாகிவிடும். ஆரம்ப காலங்களில் அவை எனக்கு சிரமமாக இருந்தது. ஆனால் இப்போது 'இதுவா?' என்று எளிதாக கடந்து செல்ல கற்றுக்கொண்டேன். தேவையற்ற விமர்சனங்களை நான் கவனிக்கவே மாட்டேன். எந்த வதந்தியும் என் மனநிலையையோ, என் வாழ்க்கையையோ பாதிக்காது" என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago
View all comments

வாசகர் கருத்து