முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக் கோப்பை போட்டி: பரிசுத்தொகையை அறிவித்தது ஐ.சி.சி.

வெள்ளிக்கிழமை, 30 செப்டம்பர் 2022      விளையாட்டு
Indian-team 2022--09-30

Source: provided

மும்பை : டி-20 உலகக் கோப்பையை வெல்லும் அணிக்கான பரிசுத்தொகையை ஐ.சி.சி. நேற்று அறிவித்துள்ளது. 

45 ஆட்டங்கள்... 

அக்டோபர் 16 முதல் நவம்பர் 13 வரை 2022 டி20 உலகக் கோப்பைப் போட்டி ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது. மொத்தமாக 45 ஆட்டங்கள் அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபர்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி நகரங்களில் நடைபெறவுள்ளன. நவம்பர் 9, 10 தேதிகளில் அரையிறுதி ஆட்டங்கள் சிட்னி, அடிலெய்டில் நடைபெறவுள்ளன. 

மெல்போர்னில்... 

இறுதிச்சுற்று ஆட்டம் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெறுகிறது. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் பிரதான சுற்றுக்கு (சூப்பர் 12) ஆஸ்திரேலியா, இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம், இங்கிலாந்து, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா ஆகிய 8 நாடுகளும் நேரடியாகத் தகுதி பெற்றுள்ளன. மீதமுள்ள 4 அணிகள் முதல் சுற்றில் போட்டிட்டு அதன் வழியாக பிரதான சுற்றுக்குத் தேர்வாகவுள்ளன. முதல் சுற்றில் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை, நமீபியா, நெதர்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஸ்காட்லாந்து, அயர்லாந்து, ஜிம்பாப்வே ஆகிய 8 அணிகளும் போட்டியிடவுள்ளன. 

பரிசுத்தொகை...

சூப்பர் 12 சுற்றின் முதல் ஆட்டத்தில் அக்டோபர் 22 அன்று சிட்னியில் ஆஸ்திரேலியா - நியூசிலாந்து அணிகளும் அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதவுள்ளன. இந்நிலையில் டி20 உலகக் கோப்பைப் போட்டியை வெல்லும் அணிக்கு ரூ. 1.6 மில்லியன் டாலர் வழங்கப்படும் என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 

8 அணிகளும்....

அதாவது இந்திய மதிப்பில் ரூ. 13.02 கோடி. 2-ம் இடம் வருகிற அணிக்கு இந்தத் தொகையில் பாதி கிடைக்கும். அதாவது ரூ. 6.51 கோடி. அரையிறுதியில் தோற்கும் அணிகள் தலா ரூ. 3.26 கோடி பெறவுள்ளன. சூப்பர் 12 சுற்றிலிருந்து வெளியேறும் 8 அணிகளும் தலா ரூ. 57 லட்சம் பெறவுள்ளன. டி20 உலகக் கோப்பைப் போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத்தொகை ரூ. 45.61 கோடி என ஐ.சி.சி. அறிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து