முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-வது டி-20 போட்டி: தொடரை வெல்லுமா இந்திய அணி ? தென்ஆப்பிரிக்காவுடன் இன்று மோதல்

சனிக்கிழமை, 1 அக்டோபர் 2022      விளையாட்டு
Dravid 2022-10-01

இன்று 2-வது டி-20 போட்டியில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. இதில் இந்திய அணி வெற்றிப்பெற்று தொடரை வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டி-20 உலகக் கோப்பையில் இடம்பெறுவாரா மாட்டாரா என்பது குறித்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் பதிலளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவில்...

இந்த மாதம் டி-20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற உள்ளது. ஆசியக் கோப்பைக்குப் பிறகு இந்திய அணி தனது சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டி-20 தொடரில் விளையாடி 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இதனையடுத்து, தற்போது இந்திய அணி தென்னாப்பிரிக்காவிற்கு எதிராக மூன்று போட்டிகள் கொண்ட டி-20 தொடரில் விளையாடி வருகிறது. தென்னாப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டி-20 போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 

காயம் காரணமாக...

முதுகில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து விலகினார். உலகக் கோப்பைக்கு முன்னதாக இந்திய அணியின் நட்சத்திர பந்து வீச்சாளர் பும்ரா காயம் காரணமாக விலகியுள்ளது இந்திய அணிக்கு மட்டுமில்லாமல் இந்திய அணியின் ரசிகர்களுக்கும் பெரிய அதிர்ச்சியாக அமைந்தது. தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா விலகிய நிலையில் அவர் டி-20 உலகக் கோப்பையில் விளையாடுவாரா மாட்டாரா என்ற கேள்வி எழுந்தது. 

இன்று 2-வது போட்டி...

இந்நிலையில், உலகக் கோப்பை தொடரில் பும்ரா இடம் பெறுவது குறித்து இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராட் பேசியுள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.  இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 2வது டி-20 போட்டி இன்று (அக்டோபர் 2) நடைபெறும் நிலையில் பத்திரிக்கையாளர்களிடம் பேசிய அவர் இதனை தெரிவித்தார்.

காத்திருக்கிறோம்... 

பும்ரா குறித்து ராகுல் டிராவிட் கூறியதாவது: “ நாங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பிற்காக காத்திருக்கிறோம். தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான தொடரில் இருந்து பும்ரா முழுவதுமாக விலகியுள்ளது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. அதனால், அடுத்த சில நாட்களுக்கு நாங்கள் காத்திருந்து அவரது உடல் நிலை குறித்து கவனிக்க உள்ளோம். சாதாரணமாக வீரர் ஒருவர் முதுகில் காயத்தினால் அவதிப்படும்போது அதிலிருந்து குணமடைந்து திரும்ப 6 மாதங்கள் தேவைப்படும். இருப்பினும், பும்ரா குணமடைந்து அணிக்கு விரைவில் திரும்புவார் என நம்புகிறோம். நேர்மையாக சொல்ல வேண்டும் என்றால் அவரது காயம் எந்த அளவிற்கு உள்ளது என்பது தெரியவில்லை. நாங்கள் எப்போதும் அவரது சிறப்பான பங்களிப்பை அணிக்குத் தர வேண்டும் என விரும்புகிறோம்.” என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து