முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நல்லக்கண்ணுவை சந்தித்து நலம் விசாரித்தார் வைகோ

ஞாயிற்றுக்கிழமை, 2 அக்டோபர் 2022      தமிழகம்
Vaiko 2022-10-02

Source: provided

சென்னை : இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணுவை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். 

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், சுதந்திரப் போராட்ட தியாகியுமான ஆர்.நல்லகண்ணு (97) காய்ச்சல் காரணமாக நேற்று முன்தினம் மாலை சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

காய்ச்சல் மற்றும் சிறுநீரக தொற்றால் நல்லக்கண்ணு பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தொடா்ந்து அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ மருத்துவமனைக்குச் சென்று, நல்லகண்ணுவை நேரில் பார்த்து நலம் விசாரித்தார்.  பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ, நல்லக்கண்ணு நலமாக உள்ளதாக தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து