முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க இனி சி.பி.சி.ஐ.டி.க்கு அதிகாரம்: அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

வியாழக்கிழமை, 24 நவம்பர் 2022      தமிழகம்
TN-2022 11 24

தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சி.பி.சி.ஐ.டி.க்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

தமிழக காவல்துறை தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலை நாட்டவும், குற்றங்களைத் தடுக்கவும், தமிழக உள்துறை அமைச்சகத்தின் கீழ், ஒரு தலைவரை (டி.ஜி.பி) கொண்டு இயங்கும் அரசு சார்ந்த அமைப்பாகும். இந்த நிலையில், தமிழ்நாடு காவல்துறையில் துறை ரீதியான புகார்களை விசாரிக்க சி.பி.சி.ஐ.டிக்கு அதிகாரம் வழங்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 

புகார்களை விசாரிக்க ஓய்வு பெற்ற காவல்துறை உயர் அதிகாரிகளை டி.ஜி.பி. அனுமதியுடன் விசாரணைக்கு பயன்படுத்தலாம் என்றும் ஆறு மாதத்திற்குள் புகாரை விசாரித்து முடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும் தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. 

இது குறித்து கூடுதல் தலைமை செயலாளர்(உள்துறை ) பனீந்திர ரெட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், 

தமிழ்நாடு காவல்துறை சீர்திருத்த விதிகளின் படி, தமிழ்நாடு மாநில பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழு ஆண்டுக்கு ஒரு முறை கூட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் கீழ் நிபுணர் குழுவும் அமைக்கப்படவுள்ளது. தமிழ்நாடு காவல் துறை பணியமைப்பு வாரியம், மாநில அளவிலான பணியமைப்பு குழுவில் நிர்வாகம், சட்டம் ஒழுங்கு மற்றும் உளவுத்துறை ஆகிய 3 பிரிவுகளின் கூடுதல் டி.ஜி.பி.க்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 

மண்டல அளவிலான குழுவிற்கு ஐ.ஜி. தலைவராக செயல்படுவார். மேலும், ஆயதப் படை மற்றும் சிறப்பு காவல் பிரிவுகளுக்கு என்று தனியாக பணியமைப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சரகம் வாரியாகவும், மாவட்டம் வாரியாகவும் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை பெருநகர் காவல் துறையில் பெருநகர் குழு, மண்டல அளவிலான குழுக்கள், மாவட்ட அளவிலான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. 

பல்வேறு நிலையில் உள்ள காவல் துறையினரின் பதவி உயர்வு மற்றும் பணி இட மாற்றம் தொடர்பாக இந்த குழு முடிவுகளை எடுக்கும். தமிழ்நாடு காவல் துறையின் கீழ் சி.பி.சி.ஐ.டி.யில் புகார் புரிவு அமைக்கப்படும். இதில் ஓய்வு பெற்ற பணியாளர்களை பணிமர்த்திக் கொள்ளவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து