JIPMER நிறுவனத்தில் உள்ள 'உதவி பேராசிரியர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது

Source: provided
நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் சார்பாக அறிமுகமான உம்ரான் மாலிக் அபாரமாக பந்துவீசி 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 306 ரன்கள் என்ற இலக்கை எட்டிய இந்திய அணி முதல் ஒருநாள் போட்டியில் தோல்வியை தழுவியது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வசீம் ஜாபர் இந்திய அணி ஐந்து பந்து வீச்சாளர்களுடன் விளையாடியதே தோல்விக்கு காரணமாக அமைந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து வாசிம் ஜாபர் கூறியதாவது:- டாம் லாதம் போன்ற திறமையான வீரர்களை விரைவில் ஆட்டம் இழக்க செய்யுங்கள். நியூசிலாந்தில் அவர் ஒரு முக்கியமான வீரராக திகழ்கிறார். நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால் நீங்கள் அவர்களது விக்கெட்டை விரைவில் வீழ்த்த வேண்டும். வேகப்பந்துவீச்சாளர் உம்ரான் மாலிக் டி20 கிரிக்கெட்டுக்கு சரிப்பட்டு வர மாட்டார். அவர் டி20 கிரிக்கெட் விட ஒருநாள் போட்டியில் தான் சிறப்பாக செயல்படுவார் என்று நினைக்கிறேன்.
__________
விஜய் ஹசாரே: மும்பையை வெளியேற்றியது உ.பி அணி
விஜய் ஹசாரே போட்டிக்கான நாக் அவுட் ஆட்டத்தில் மும்பை அணியை உத்தரப் பிரதேச அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது. ஆமதாபாத்தில் உள்ள மோடி மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி, 48.3 ஓவர்களில் 220 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. பிருத்வி ஷா 10 ரன்களுக்கும் கேப்டன் ரஹானே 26 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார்கள். 94 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையில் ஹார்திக் தாமோரும் ஷாம்ஸ் முலானியும் அரை சதமெடுத்து அணியைக் காப்பாற்றினார்கள்.
ஷிவம் மவி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். உத்தரப் பிரதேச அணி 45.4 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஆர்யன் ஜுயல் 82 ரன்கள் எடுத்தார். ஜம்மு & காஷ்மீர் அணி விஹ்ஜய் ஹசாரே போட்டியில் முதல்முறையாகக் காலிறுதிக்குத் தகுதியடைந்துள்ளது. கேரளத்தை 7 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. நவம்பர் 28 அன்று நடைபெறவுள்ள காலிறுதி ஆட்டத்தில் செளராஷ்டிரத்தை எதிர்கொள்கிறது தமிழக அணி.
________________
'தல்' ஹாக்கி போட்டி: இந்திய அணி தோல்வி
இந்திய ஆண்கள் ஹாக்கி அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இந்த தொடரின் முதல் போட்டி அடிலெய்டில் நேற்று தொடங்கியது. பரபரப்பான இந்த போட்டியில் 5-4 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது.
இந்திய அணி சார்பில் ஆகாஷ்தீப் சிங் ஹாட்ரிக் கோல் அடித்தார். ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். ஆஸ்திரேலியா சார்பில் பிளேக் கோவர்ஸ் (2 கோல் அடித்தார். லாச்லன் ஷார்ப் , நாதன் எஃப்ராம்ஸ் , டாம் கிரேக் ஒரு கோல்களை அடித்தனர்.
________________
சவுதி அரேபிய வீரர்களுக்கு ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசு
உலக கோப்பை கால்பந்து போட்டியில் ஆசிய கண்டத்தில் உள்ள சவுதி அரேபியா யாருமே எதிர் பார்க்காத வகையில் 2 முறை சாம்பியனான அர்ஜென்டினாவை அதிர்ச்சிகரமாக தோற்கடித்தது. 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இருந்தது. இந்த வெற்றியால் சவுதி அரேபியாவில் மகிழ்ச்சி அலைக் கடல் பொங்கியது. அந்நாட்டு மன்னர் மறுநாள் பொது விடுமுறை அறிவித்தார்.
இந்த நிலையில் அர்ஜென்டினாவை வீழ்த்தி வரலாற்று வெற்றியை பெற்ற சவுதி அரேபிய கால்பந்து வீரர்கள் ஒவ்வொருவருக்கும் ரோல்ஸ் ராய்ஸ் கார் பரிசாக வழங்கப்படும் என்று அந்நாட்டு இளவரசர் முகமது பின் சல்மான் அல் சவுத் அறிவித்துள்ளார். இந்தியாவில் ரோல்ஸ் ராய்ஸ் காரின் விலை ரூ.8.99 கோடி முதல் 10.48 கோடி வரையில் விற்கப்படுகிறது. இது மாதிரியான விலை உயர்ந்த பரிசு வீரர்களுக்கு வழங்கப்படுவது இது முதல் முறையல்ல. 1994-ல் பெல்ஜியத்தை வீழ்த்திய போது இது மாதிரியே கார் பரிசு வழங்கப்பட்டது.
________________
இந்தியா - பாக்., ஆட்டம்: விராட் கோலி உருக்கம்
கடந்த அக்டோபர் 23 அன்று மெல்போர்னில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பை ஆட்டத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் மோதின. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி. இந்நிலையில் அந்த ஆட்டம் பற்றி ட்வீட் வெளியிட்டுள்ளார் விராட் கோலி. அவர் கூறியதாவது:
2022, அக்டோபர் 23. என் இதயத்தில் இந்நாளுக்குச் சிறப்பு இடமுண்டு. ஒரு கிரிக்கெட் ஆட்டத்தில் இந்தளவுக்கான உற்சாகத்தை இதற்கு முன்பு கண்டதில்லை. என்ன ஓர் ஆசிர்வதிக்கப்பட்ட மாலை அது என்று கூறியுள்ளார்.
________________
வலுவான இங்கிலாந்துடன் டிரா செய்த அமெரிக்க அணி
22வது பிபா உலககோப்பை கால்பந்து தொடர் கத்தாரில் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் 12.30 மணிக்கு அல் பேட் ஸ்டேடியத்தில் தொடங்கி நடந்த போட்டியில், குரூப் பி பிரிவில் தரவரசையில் 5வது இடத்தில் உள்ள இங்கிலாந்து-அமெரிக்கா (16வது ரேங்க்) அணிகள் மோதின. இங்கிலாந்து முதல் போட்டியில் ஈரானை 6-2 என வீழ்த்திய உற்சாகத்திலும், அமெரிக்கா முதல் ஆட்டத்தில் வேல்சுடன் டிரா செய்ததால் கட்டாய வெற்றி நெருக்கடியிலும் களம் இறங்கின. ஆட்டம் தொடங்கியது முதலே ஈரான் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணியா இது என்று அதிர்ச்சியை ஏற்படுத்துவது போல் களத்தில் செயல்பட்டது.
அமெரிக்கா, இங்கிலாந்து வீரர்களை கட்டுக்குள் வைத்திருந்தது. இதனால் முதல் பாதி ஆட்டத்தில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. 2வது பாதி ஆட்டத்தில் தொடக்கம் முதலே அமெரிக்கா கோல் அடிக்க தீவிரமாக முயற்சித்தது. இறுதிவரை இரு அணிகளும் கோல் அடிக்காததால் ஆட்டம் டிராவில் முடிந்தது. இந்த உலகக்கோப்பை தொடரில் டிராவில் முடிந்த 7வது போட்டி இதுவாகும். இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளிகள் வழங்கப்பட்டன.
________________
கால்பந்து போட்டியில் டோனி ஜெர்சியுடன் வலம் வந்த ரசிகர்
22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் குரூப் ஜி பிரிவு லீக் சுற்றில் நடைபெற்ற ஆட்டத்தில் பிரேசில்- செர்பியா அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இதனால் 0-0 என சமனில் இருந்தது. ஆட்டத்தின் இரண்டாவது பாதியில் பிரேசில் வீரர் ரிச்சர்லிசன் 62 மற்றும் 73-வது நிமிடங்களில் ஒரு கோல் அடித்து அசத்தினார்.
இறுதியில், பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் செர்பியாவை வீழ்த்தியது.இந்த போட்டியில் இந்தியர் ஒருவர் பிரேசில் கால்பந்து ரசிகருடன் இணைந்து சென்னை அணி கேப்டன் டோனியின் ஜெஸியை பிடித்து போஸ் கொடுத்துள்ள புகைப்படம் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீப காலங்களாக டோனி என்ன செய்தாலும் அது புகைப்படமாக மாறி இணையத்தை கலக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் டென்னிஸ் விளையாடிய புகைப்படம், குடும்பத்துடன் அமர்ந்து உலக கோப்பை கால்பந்து போட்டியை பார்த்த புகைப்படங்களில் இணையத்தில் வைரலானது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
முருங்கைப்பூ பாயாசம்.![]() 2 days 6 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 5 days 6 hours ago |
ராகி அடை![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-30-01-2023
30 Jan 2023 -
உணவு, எரிபொருட்கள் இன்றி பொருளாதார சிக்கலில் தவிக்கும் இந்தியாவின் அண்டை நாடுகள்
30 Jan 2023இஸ்லாமாபாத் : உணவு, எரிபொருட்கள் இன்றி கடும் பொருளாதார சிக்கலில் இந்தியாவின் அண்டை நாடுகள் தவித்து வருகின்றன.
-
விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணையும் மைக்கேல்
30 Jan 2023Karan C Productions LLP & Sree Venkateswara Cinemas LLP நிறுவனங்களின் தயாரிப்பில், ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில், விஜய் சேதுபதி சந்தீப் கிஷன் இணைந்து நடித்திருக்கும
-
முடியை தானமாக வழங்கிய நடிகை வைஷாலி
30 Jan 2023திருமதி தென் இந்தியா என்ற தலைப்பில் திருமணமான பெண்களுக்கான போட்டி கேரளாவில் சமீபத்தில் நடைபெற்றது.
-
பாகிஸ்தான், பெஷாவர் மசூதி குண்டுவெடிப்பில் 25 பேர் பலி : 100-க்கும் மேற்பட்டோர் காயம்
30 Jan 2023இஸ்லாமாபாத் : பாகிஸ்தான் பெஷாவரில் நடந்த குண்டுவெடிப்பில் 25 பேர் கொல்லப்பட்டதாகவும் , 100க்கும் மேற்பட்டோ் காயமுற்றதாகவும் பாக்., செய்தி நிறுவனம் தெரிவிக்கிறது.
-
இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே பதற்றம்: அமைதி பேச்சுவார்த்தையில் ஈடுபட போப் வலியுறுத்தல்
30 Jan 2023ரோம் : இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையே சமீப நாட்களாக மோதல் வலுத்து வரும் நிலையில், இரு நாட்டு அரசுகளும் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் போப் பிரான்சிஸ்
-
யோகி பாபு நடிக்கும் பொம்மை நாயகி
30 Jan 2023இயக்குனர் பா.ரஞ்சித் தயாரிப்பில் யோகி பாபு நடிக்கும் படம் பொம்மை நாயகி. இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரசாத் லேப்பில் சமீபத்தில் நடைபெற்றது.
-
6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்கிறது பிலிப்ஸ் நிறுவனம்
30 Jan 2023வாஷிங்டன் : பிலிப்ஸ் நிறுவனம் 6000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
பாகிஸ்தான் பாராளுமன்ற தேர்தல்: 33 தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டி
30 Jan 2023லாகூர் : இடைத்தேர்தல் நடைபெறும் 33 பாராளுமன்ற தொகுதிகளிலும் இம்ரான்கான் போட்டியிட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
-
ஆஸி.யில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்திய காலிஸ்தான் ஆதரவாளர்கள்
30 Jan 2023மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவில் தேசியக் கொடி ஏந்திய இந்தியர்களை காலிஸ்தான் ஆதரவாளர்கள் தாக்கியதில் 5 பேர் காயமடைந்தனர்.
-
ஐஸ்வர்யா ராஜேஷின் தி கிரேட் இந்தியன் கிச்சன்
30 Jan 2023தி கிரேட் இந்தியன் கிச்சன் படம் மலையாள படத்தின் ரீமேக் ஆகும். பிப்ரவரி 3 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள இப்படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
-
அயலி விமர்சனம்
30 Jan 2023அயலி என்கிற பெண் தெய்வத்தை வணங்கும் பெண்பிள்ளைகள் பருவமெய்தியதும் வீட்டை விட்டு வெளியே போகக்கூடாது, உடனடியாகத் திருமணம் செய்ய வேண்டுமென்ற கட்டுப்பாடு வைத்திருக்கிறார்கள
-
ஸ்ரீநகரில் தேசியக்கொடியை ஏற்றி இந்திய ஒற்றுமை யாத்திரையை நிறைவு செய்தார் ராகுல் காந்தி
30 Jan 2023ஸ்ரீநகர் : இந்திய ஒற்றுமை யாத்திரை நிறைவு நிகழ்ச்சி ஸ்ரீநகரில் உள்ள பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகத்தில் வைத்து திங்கள்கிழமை நடந்தது.
-
வெள்ளை மாளிகையை மீட்டெடுப்பேன்: டிரம்ப்
30 Jan 2023கொலம்பியா : அமெரிக்க அதிபர் ஜோபைடனின் பதவி காலம் முடிவடைவதை தொடர்ந்து அடுத்த ஆண்டு அங்கு தேர்தல் நடைபெற உள்ளது.
-
தங்களது குழந்தைக்கு இந்தியா என பெயர் சூட்டிய பாகிஸ்தான் தம்பதி
30 Jan 2023இஸ்லாமாபாத் : வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் நாட்டை பூர்வீகமாக கொண்ட தம்பதியர் தனது குழந்தைக்கு 'இந்தியா' என பெயரிட்டுள்ளனர்.
-
தேசபிதா காந்தியின் 76-வது நினைவு தினம்: திருவுருவ படத்திற்கு கவர்னர் ரவி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை
30 Jan 2023சென்னை : 76-வது நினைவு தினத்தையொட்டி நேற்று மகாத்மா காந்தியின் திருவுருவ படத்திற்கு கவர்னர், முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினர்.
-
டிரோன் தாக்குதலில் ஈரான் ராணுவ தொழிற்சாலையில் பயங்கர விபத்து
30 Jan 2023டெஹ்ரான் : ஈரான் ராணுவ தொழிற்சாலையில் டிரோன் தாக்குதல் நடத்தப்பட்டது.
-
அடுத்த வாரம் வெளியாகும் டாடா
30 Jan 2023'சரவணன் மீனாட்சி' தொடரில் நடித்து பிரபலமானவர் கவின்.
-
பாரதீய ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் : மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் அறிவுரை
30 Jan 2023புதுடெல்லி : பாரதீய ஜனதா ஆட்சியின் சாதனைகளை மக்களிடம் பரப்ப வேண்டும் என்று மத்திய அமைச்சர்களுக்கு பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
-
தமிழகத்தில் 10, பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு முடிவு வெளியாகும் தேதிகள் : அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு
30 Jan 2023சென்னை : 10-ம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியிடப்படும் தேதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளார்.
-
ஜஸ்டின் விஜய் நடிக்கும் ஸ்ட்ரைக்கர்
30 Jan 2023ASW கிரியேஷன்ஸ் மற்றும் JSJ சினிமாஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஹென்றி டேவிட் மற்றும் ஜஸ்டின் விஜய் ஆகியோர் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ஸ்ட்ரைக்கர்.
-
அமைச்சரை சுட்டுக்கொன்றவர் மனநலப்பிரச்சனை உள்ளவராம் : மனைவி தெரிவித்த அதிர்ச்சி தகவல்
30 Jan 2023புவனேஷ்வர் : ஒடிசா அமைச்சர் நபிகிஷோர் தாஸை சுட்டுக் கொன்ற காவல்துறை துணை உதவி ஆய்வாளர் கோபால் தாஸுக்கு உளவியல்/மனநலப் பிரச்னை இருந்ததாக அவரது மனைவி தெரிவித்துள்ளா
-
ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்புக்கு அனுமதி கோரி வழக்கு: பிப்ரவரி 3 - ம் தேதிக்கு ஒத்திவைத்தது ஐகோர்ட
30 Jan 2023சென்னை : தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்.
-
முதல் முறையாக ஈரோடு இடைத்தேர்தலில் அறிமுகம்: பாதுகாப்பு அம்சத்துடன் புதிய வாக்காளர் அடையாள அட்டை : தலைமை தேர்தல் அதிகாரி சாகு அறிவிப்பு
30 Jan 2023சென்னை : பாதுகாப்பு அம்சத்துடன் 16 லட்சம் புதிய வாக்காளர் அடையாள அட்டை அச்சிடப்பட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு தெரிவித்திருக்கிறார்.
-
மருத்துவத்துறையில் காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்புக : தமிழக அரசுக்கு ஓ.பி.எஸ். கோரிக்கை
30 Jan 2023சென்னை : தமிழகத்தில் மருத்துவ துறையில் காலியாக உள்ள தலைமை பதவி இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார்.