முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துப்பாக்கிச்சூட்டிற்கு பின் முதல் பேரணி: மரணத்தை கண்டு அஞ்ச மாட்டேன் : இம்ரான்கான் ஆவேச பேச்சு

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      உலகம்
Imran-Khan 2022-11-27

Source: provided

ராவல்பிண்டி : துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த இம்ரான் கான், முதன் முறையாக ராவல்பிண்டியில் நடந்த பேரணியில் பங்கேற்று உரையாற்றினார்.  அப்போது மரணத்தை கண்டு அஞ்ச மாட்டேன் என்று ஆவேசமாக பேசினார். 

கடந்த 3-ம் தேதி பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்ற கூட்டத்தில், அவர் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். அந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக இம்ரான் கான் உயிர்தப்பினார். அவரது காலில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்ததால் தொடர்ந்து அவர் இஸ்லாமாபாத் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தார். இந்த நிலையில் ராவல்பிண்டியில் இம்ரான் கான் பங்கேற்கும் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

அதனால் அவர் மருத்துவர்கள் குழுவுடன் ஹெலிகாப்டர் மூலம் ராவல்பிண்டி வந்தார். குண்டு துளைக்காத காரில், குண்டு துளைக்காத ஜாக்கெட்டை இம்ரான் கான் அணிந்திருந்தார். சாதாரணமாக நடக்க முடியாததால், மருத்துவ உபகரண உதவியுடன் ஆதரவாளர்கள் புடைசூழ நடந்து வந்தார். தொடர்ந்து அவர் பேரணி நடந்த இடத்தில் பேசுகையில், 

நான் மரணத்தைக் கண்டு அஞ்சமாட்டேன். எங்களது கட்சியின் உறுப்பினர்கள் அனைவரும் தங்களது எம்.பி. பதவிகளை ராஜினமா செய்வார்கள். இதற்காக அனைத்து மாநில முதல்வர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை நடத்துவோம் என்றார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து