Idhayam Matrimony

சீன தொலை தொடர்பு சாதனங்கள் விற்பனைக்கு அமெரிக்காவில் தடை

ஞாயிற்றுக்கிழமை, 27 நவம்பர் 2022      உலகம்
China 2022-11-27

Source: provided

வாஷிங்டன் ; அமெரிக்காவில் சீனாவின் தொலை தொடர்பு நிறுவன தகவல் தொடர்பு சாதனங்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.  

அமெரிக்காவில் உள்ள சீன தொழில்நுட்ப நிறுவனங்கள் சீனாவுக்கு உளவு பார்ப்பதாக அமெரிக்கா தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. இதன் காரணமாக அந்த நாட்டு அரசு சீன தொழில் நுட்ப நிறுவனங்களுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த நிலையில் சீனாவின் பிரபல தொலை தொடர்பு நிறுவனங்களான ஹவாய் மற்றும் இசட்.டி.இ ஆகிய இரு நிறுவனங்களின் தகவல் தொடர்பு சாதனங்களை இறக்குமதி செய்வதற்கும், விற்பனை செய்வதற்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது. 

அமெரிக்காவின் மத்திய தகவல் தொடர்பு ஆணையம் சீனாவின் இந்த 2 நிறுவனங்களையும் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் பட்டியலில் சேர்த்ததை தொடர்ந்து, இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தவிர வீடியோ கண்காணிப்பு கருவிகள் மற்றும் இருவழி ரேடியோ அமைப்புகளை உருவாக்கும் சீன நிறுவனங்களான டஹுவா, ஹைக்விஷன் மற்றும் ஹைடெரா ஆகிய நிறுவனங்களின் உபகரணங்ளையும் இறக்குமதி மற்றும் விற்பனை செய்ய அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 2 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 3 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 3 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 5 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 5 months ago
View all comments

வாசகர் கருத்து