முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ரூ.12 லட்சம் கோடி சொத்துடன் இந்திய பணக்காரர்களில் கவுதம் அதானி முதலிடம்

செவ்வாய்க்கிழமை, 29 நவம்பர் 2022      இந்தியா      வர்த்தகம்
Gautam-Adhani 2022 11 22

ரூ.12 லட்சம் கோடி சொத்துடன் இந்திய பணக்காரர்களில் கவுதம் அதானி முதலிடத்தை பிடித்துள்ளார். இந்தியாவின் நம்பர்-1 பணக்காரராக திகழ்ந்த முகேஷ் அம்பானி 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி 3-வது இடத்தில் உள்ளார்.

இந்தியாவின் முதல் 10 பணக்காரர்கள் பற்றிய விவரங்களை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதன்படி அதானி குரூப் நிறுவன தலைவர் கவுதம் அதானி இந்தியாவின் நம்பர் 1 பணக்காரராக திகழ்வது தெரிய வந்துள்ளது. அவரது சொத்து மதிப்பு 12 லட்சத்து 11 ஆயிரத்து 40 கோடி ரூபாயாகும். இதன் மூலம் அவர் உலகின் 2-வது மிகப்பெரிய பணக்காரர் என்ற அந்தஸ்தையும் பெற்றுள்ளார்.

இந்தியாவின் நம்பர்-1 பணக்காரராக திகழ்ந்த முகேஷ் அம்பானி கடந்த ஆண்டு 5 சதவீத இழப்பை சந்தித்ததால் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளார். டி-மார்ட் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ராதாகிஷன் தாம்லனி 3-வது இடத்தில் உள்ளார். இவர்களை தொடர்ந்து சீரம் இன்ஸ்டிடியூட் தலைவர் சைரஸ், ஜின்டால் குரூப் நிறுவனத்தின் சாவித்ரி ஜின்டால், ஆனந்த் மகேந்திரா ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 days ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து