முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடந்த 3 மாதத்தில் ஐகோர்ட் மதுரை கிளையில் 6300 வழக்குகளுக்கு தீர்வு: வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பாராட்டு

வியாழக்கிழமை, 1 டிசம்பர் 2022      தமிழகம்
madurai--high-court2022-08--11

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் முதல் அமர்வில் கடந்த 3 மாதங்களில் 6300 வழக்குகள் முடிக்கப்பட்டதற்காக வழக்கறிஞர்களுக்கு நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முதல் அமர்வில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்யநாராயண பிரசாத் ஆகியோர் கடந்த 3 மாதங்களாக பொதுநல வழக்குகள், ரிட் மேல்முறையீட்டு மனுக்களை விசாரித்து வருகின்றனர். இவர்களின் 3 மாத பணிக்காலம் இன்றுடன் முடிகிறது.

இந்நிலையில், நீதிபதிகள் ஆர்.மகாதேவன், ஜெ.சத்ய நாராயண பிரசாத் அமர்வு நேற்று கூடியபோது, இந்த அமர்வு செப்டம்பர் முதல் நவம்பர் வரை 3 மாத காலத்தில் 6,300 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளது. இதற்கு ஒத்துழைப்பு வழங்கிய வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள், அரசு வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவிக்கிறோம் என்று கூறினர். மேலும், உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழக்கறிஞர்களின் செயல்பாடு மிகவும் பாராட்டுக் குரியது என்றும் நீதிபதிகள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து