முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் முகவரித் துறையால் பெறப்பட்ட மனுக்கள் மீதான நடவடிக்கை: முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

சனிக்கிழமை, 3 டிசம்பர் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

சென்னை தலைமைச் செயலகத்தில், முதல்வரின் முகவரித் துறையில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார். 

பொதுமக்கள் குறைகளைக் களைவதில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வரும் முதல்வர், இதற்கென முதல்வரின் முகவரி என்ற தனித் துறையை உருவாக்கி தனது நேரடி கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு அவ்வப்போது முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கும், முதலமைச்சர் உதவி மையத்திற்கும் திடீர் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதுமட்டுமல்லாமல், மனுதாரர் மற்றும் அலுவலர்களை நேரடியாக தொடர்பு கொண்டும், கள நிலவரங்களை முதல்வர் கேட்டறிந்து வருகிறார். 

இந்த நிலையில் இத்துறையின் வாயிலாக பொது மக்களிடமிருந்து பெறப்படும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்தும், மாவட்டங்களில் மேற்கொள்ளும் சுற்றுப்பயணங்களின் போது பெறப்படும் மனுக்கள் மீதும், அவற்றில் தெரிவிக்கப்படும் குறைகளுக்கு தீர்வு காணப்பட்டு அவற்றினை விரைவாக நிறைவேற்றுவது தொடர்பாகவும் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார். 

அதை தொடர்ந்து முதல்வரின் முகவரித்துறையில் பெறப்படும் அனைத்து மனுக்களையும் கோரிக்கைகளின் தன்மைக்கு ஏற்ப பகுத்தாய்வு செய்து அம்மனுக்களை விரைவாக சீரிய முறையில் தீர்வு காண்பதற்கு உரிய முயற்சிகளை மேற்கொள்ள முதல்வர் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். 

இந்த ஆய்வின் போது முதல்வர், ஒரு சில மனுதாரர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டறிந்தார்.  இந்த ஆய்வுக் கூட்டத்தில், தலைமைச் செயலாளர் இறையன்பு, முதல்வரின் முகவரித் துறை சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ், முதலமைச்சரின் தனிப்பிரிவு தனி அலுவலர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து