முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவில் இந்தியர் சுட்டுக்கொல்லப்பட்டார் : கொள்ளையர்கள் வெறிச்செயல்

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      உலகம்
America-1 2023 01 24

Source: provided

வாஷிங்டன் : அமெரிக்காவில் இந்திய வம்சாவளி ஒருவரை கொள்ளையர்கள் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் பிலடெல்பியா மாகாணம் டேகோனி நகரில் வாகனங்களுக்கு கியாஸ் நிரப்பும் நிலையம் ஒன்று உள்ளது. இங்கு 66 வயதான இந்திய வம்சாவளியை சேர்ந்த நபர் ஒருவர் வேலை பார்த்து வந்தார். 

இந்த நிலையில் சம்பவத்தன்று, இந்த கியாஸ் நிலையத்துக்கு முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 3 பேர் வந்தனர். அப்போது அங்கு பணியில் இருந்தவரை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடிதுடித்து இறந்தார்.

பின்னர் அந்த மர்ம நபர்கள் கியாஸ் நிலையத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்து தப்பி சென்றனர். இந்த சம்பவம் அங்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஊழியரை சுட்டுக்கொன்றுவிட்டு பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.

 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony
View all comments

வாசகர் கருத்து