முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டெல்லியில் 5.8 ரிக்டர் அளவில்சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு

செவ்வாய்க்கிழமை, 24 ஜனவரி 2023      இந்தியா
Earthquake 2022 12 03

Source: provided

புதுடெல்லி : தலைநகர் டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.டெல்லியில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம் நேபாளத்தை மையமாக் கொண்டு  ரிக்டர் அளவுகோளில் 5.8 ஆக பதிவாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலநடுக்கம் டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 30 வினாடிகள் உணரப்பட்டது. நிலநடுக்கத்தின் பாதிப்பு உத்தரகண்ட், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தானிலும் உணரப்பட்டதாக  தகவல் வெளியாகியுள்ளது.  நிலநடுக்கம் காரணமாக டெல்லியின் பல்வேறு இடங்களில் கட்டங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தை தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் அடைந்தனர். எனினும், இந்த நிலநடுக்கத்தால் உயிர்ச்சேதமோ, பொருள் சேதமோ ஏற்பட்டதாக உடனடி தகவல் ஏதும் வெளியாகவில்லை.

இதேபோல் நேபாளத்தில் நேற்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகி இருந்தது. இது தொடர்பாக நில அதிர்வுக்கான தேசிய மையம் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், நேபாளத்தில் நேற்று மதியம் 2.28 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவானது. நேபாள தலைநகர் காத்மாண்டுவில் இருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜூம்லா மாவட்டத்தை மையமாகக் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. பூமியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தால் உயிர் சேதம் ஏதும் நேரிட்டுள்ளதா என்பது தொடர்பாக இதுவரை தகவல் இல்லை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து