முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செக் குடியரசில் புதிய அதிபர் தேர்வு

ஞாயிற்றுக்கிழமை, 29 ஜனவரி 2023      உலகம்
Peter-Powell 2023 01 29

Source: provided

பராக் ; செக் குடியரசு நாட்டில் நடந்த அதிபர் தேர்தலில் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டார். 

செக் குடியரசின் புதிய அதிபரை தேர்வு செய்யும் தேர்தல் நடந்தது. இதில் மிகவும் பிரபலமான  கோடீஸ்வரர் ஆண்ட்ரேஜ் பாபிஸ் மற்றும் ஓய்வு பெற்ற ராணுவ ஜெனரல் பீட்டர் பாவெல் ஆகியோர் போட்டியிட்டனர். 

 

இந்த தேர்தலில் பாவெல் வெற்றி பெற்றார். பதிவான 93 சதவீத வாக்குகளில் பாவெலுக்கு 57.4 சதவீத வாக்குகளும், பாபிசுக்கு 42.6 சதவீத வாக்குகளும் கிடைத்தன. இதையடுத்து பாவெல் செக் குடியரசின் புதிய அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து